• Sat. Oct 18th, 2025

மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!

Byமு.மு

Dec 20, 2024
மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்

 சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். கொங்கு மட்டன் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், சிவகங்கை -மட்டன் உப்புக்கறி உள்ளிட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாளை முதல் டிச.24 வரை பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும். மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவிடும் வகையில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.