• Mon. Oct 20th, 2025

“நாற்பதும் நமதே! நாடும் நமதே!”

Byமு.மு

Jan 25, 2024
நாற்பதும் நமதே! நாடும் நமதே!

“தீரர்களின் கோட்டம்” எனும் பெருமையை திருச்சிக்கு வழங்கிய நமது கழகத்தின் பெருந்தொண்டர் கலைஞர் அவர்களின் முழு உருவச் சிலையை திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக அதே திருச்சியில் நிறுவினோம்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிறுவப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலையை, மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று திமுக இளைஞர் அணி செயலாளர்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் கலைஞர் சிலை அமைக்கும் பணியைத் தொடங்கியது மாவட்டக் கழகம். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதிகுட்பட்ட கலைஞர் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் சிலையை திறந்துவைத்து சிறப்பித்த கழக இளைஞரணி செயலாளர் அவர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தங்களின் ஆணையை ஏற்று “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” எனும் இலக்கை நோக்கி உறுதியுடன் உழைப்போம்.