தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொதுமக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2-வது நாளாக அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது – போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொது மக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் 2-வது நாளாக இன்றும் (10.01.2024) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.
10.01.2024 நண்பகல் 02.00 மணி நிலவரப்படி
த.நா.அ. போ. கழகம் | இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் | இயக்கப்பட்ட இயக்க பேருந்துகள் | பேருந்துகள் சதவிகிதம் |
மா.போ.க. | 2557 | 2548 | 99.65% |
அ,வி.போ.க. | 188 | 188 | 100.00% |
விழுப்புரம் | 2,792 | 757 | 98.75% |
சேலம் | 1,464 | 1,451 | 99,11% |
கோயம்புத்தூர் | 2,269 | 2189 | 96.47% |
கும்பகோணம் | 2,921 | 2,877 | 58.49% |
மதுரை | 2166 | 2136 | 95.61% |
திருநெல்வேலி | 1,631 | 1,632 | 100.06% |
மொத்தம் | 15,988 | 15,778 | 98.69% |
எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது, மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர், பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.