• Sun. Oct 19th, 2025

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கு Hall Ticket வெளியீடு…

Byமு.மு

Dec 19, 2023
கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கு Hall Ticket வெளியீடு

கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கு Hall Ticket பதிவிறக்கம்‌ செய்யலாம்‌

கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்  கூட்டுறவுச்‌ சங்கங்களில்‌ உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால்‌ 10.11.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதற்கான எழுத்துத்‌ தேர்வு 24.12.2023 அன்று தொன் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன்  மேல் நிலை பள்ளி, அண்ணா நகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் மேல் நிலை பள்ளி, வில்லிவாக்கம், அரசினர் கலைக் கல்லூரி, நந்தனம், பச்சையப்பா கல்லூரி, சேத்துப்பட்டு ஆகிய 6 மையங்களில்‌  நடத்தப்படவுள்ளது.

இத்தேர்விற்கான அனுமதி நுழைவுச்‌  சீட்டினை 18.12.2023 முதல்‌ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் https://www.drbchn.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. கூடுதல்‌ விபரங்களுக்கு [email protected] மின்னஞ்சல்‌ மற்றும்‌ 044-2461 6503,    044-2461 4289 தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்‌.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்‌

 சென்னை மாவட்டம்‌