கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2024) கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 560 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 273 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 489 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 57,325 பயனாளிகளுக்கு 223 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொள்ளாச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூர் வந்தடைந்தார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் முதலமைச்சர்
அவர்களுக்கு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.
பின்னர் கோயம்புத்தூரிலிருந்து முதலமைச்சர் அவர்கள் விழா நடைபெறும் பொள்ளாச்சிக்கு சாலை சாலை மார்க்கமாக சென்றார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி வரை வழிநெடுகிலும் முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 174 கோடியே 40 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொகுப்பு கோபுரம், உயர்தர அறுவை அரங்கு, டவர் பிளாக்கில் மருத்துவ எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் வால்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 4 கோடி ரூபாய் செலவில் மேட்டுப்பாளையம் வட்டம், மானார் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான தங்கும் விடுதி, சிங்காநல்லூர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி;
அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் 10 கோடியே 11 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் 160 வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 3 கோடியே 31 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் 21 புதிய நியாய விலைக் கட்டடங்கள்;
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், 13 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் மதுக்கரை வட்டம், குறிச்சி புறநகர் திட்டப் பகுதியில் வணிக வளாகம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 16 கோடியே 69 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில், சுயஉதவிக் குழு கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், 29 புனரமைக்கப்பட்ட சாலைகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 17 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் உயிரி தொழில் நுட்ப மகத்துவ மையம்;
காவல் துறை சார்பில், 1 கோடியே 62 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில், கோவை மாநகர காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட உயர் காவல் அதிகாரிகள் விருந்தினர் மாளிகை மற்றும் காவல்துறை ஓட்டுநர்கள் அறைகள்;
என மொத்தம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 240 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் 65 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், 34 கோடியே 13 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், சாடிவாயில் கிராமத்தில் புதிய யானைகள் முகாம், சிறுமுகை அருகே வனவிலங்குகளுக்கான மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம், கோழிகமுத்தி யானைகள் முகாம் மேம்படுத்தும் பணி, 47 யானை பராமரிப்பு பணியாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் கலாச்சார இணக்கமான வீடுகள் கட்டும் பணி;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன உபகரணங்களுடன் கூடிய கூடுதல் நீராவி சலவையகக் கட்டடம்;
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சார்பில், 318 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி (பகுதி) மற்றும் வெள்ளக்கிணறு பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 19 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகள்;
எரிசக்தித்துறை சார்பில், 89 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், வால்பாறை நகராட்சியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்;
காவல்துறை சார்பில், 53 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர் நகரில் காந்திபுரத்தில் அமையவுள்ள 20 உதவி ஆணையர், 40 ஆய்வாளர் மற்றும் 80 உதவி ஆய்வாளர் அடுக்குமாடி குடியிருப்புகள்;
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 19 கோடியே 23 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காளப்பட்டி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தென்னை நார் சார்ந்த பொருட்கள் பரிசோதனைக்கூடம், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இரண்டு மற்றும் மூன்று சக்கர மின் வாகனங்களில் பொருந்தும் மோட்டார்களுக்கான பரிசோதனைக்கூடம், மாவட்ட தொழில் மைய ஏற்றுமதி ஊக்குவிப்பு மையத்தை மேம்படுத்தும் பணி;
என மொத்தம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 448 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் விவரம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அறுவடைக்குப் பின் சார் தொழில் நுட்ப இயந்திரம், சூரிய கூடார உலர்த்தி மற்றும் மின் மோட்டார், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண் நவீன மயமாக்கல் திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் உயர்தர அச்சு வெல்லம் தயாரிப்பு மையம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள், உழவர் சந்தை அடையாள அட்டைகள் வழங்குதல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசனத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க செயல் விளக்கம், வேளாண் உபகரண தொகுப்பு, தார்பாலின், கலைஞரின் அனைத்து கிராம
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அங்கக வேளாண்மை தொகுப்பு, தெளிப்பான், மரக்கன்றுகள், தென்னை புதிய நடவு செயல் விளக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்துமிக்க சிறுதானிய சோளம் செயல் விளக்கம், தென்னை வளர்ச்சி வாரிய திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், தேசிய எண்ணெய் வித்து இயக்கத்தில் நிலக்கடலை செயல்விளக்கம், ஊட்டச்சத்துமிக்க சிறுதானிய கம்பு கேழ்வரகு செயல்விளக்கம் போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள்;
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் உணவு சார்ந்த குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்களில் உதவிகள்;
பெரியநாயக்கன்பாளையம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (மகளிர் திட்டம்) சார்பில், வங்கிக் கடன் இணைப்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் மற்றும் சிக்கதாசம்பாளையம் திட்டப் பகுதிகளில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்குதல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சுய உதவிக் குழுக்கடன் வழங்குதல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் மீன்பிடி வலை வழங்குதல், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய மீன்வளர்ப்பு குளம் அமைத்திட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இ-பட்டாக்கள் வழங்குதல், தாட்கோ மூலம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சமூக பொருளாதார அதிகாரமளித்து வனம் உண்டாக்க தொழில் முனைவோர் திட்டத்தில் உதவிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் உதவி உதவி வழங்குதல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்குதல்;
19,329 என மொத்தம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு 127 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல்
நெடுஞ்சாலைத் துறை சார்பில், 115 கோடி ரூபாய் செலவில் பல்லடம்-தாராபுரம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்ட பணி;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 60 இலட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாநகராட்சி சுகாதார நிலையக் கட்டடம்;
பொதுப்பணித் துறை சார்பில், 9 கோடி ரூபாய் செலவில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கூடுதல் கட்டடம்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 45 கோடியே 11 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், திருப்பூர் மாவட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் முடிவற்ற 70 தார் சாலைப் பணிகள்;
என மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் 169 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் 79 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 1 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமுருகன் பூண்டி நகராட்சியில் நுண்ணுயிர் உரமாக்கல் மையம் மற்றும் வள மீட்பு மையம் அமைக்கும் பணிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 7 கோடியே 34 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூலனூர் வட்டாரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள்;
என மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் 12 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 புதியத் திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரம்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (மகளிர் திட்டம்) சார்பில், சுய உதவிக்குழு கடன், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நுண் நிறுவன நிதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்திய காலக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், மாற்றுத் திறனாளி கடன், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் மீன் பிடி வலைகள் வழங்கும் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு அட்டைகள் வழங்குதல்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ சார்பில் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள், வன உரிமைப் பட்டா, இலவச தையல் இயந்திரம், ஆதிதிராவிடர் மனைப் பட்டா வழங்குதல், மாற்றுத்திறனாளிகள்
நலத்துறை சார்பில் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குதல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் வழங்குதல்;
தொழிலாளர் நலத் துறை சார்பில் கல்வி உதவித்தொகை, விபத்து நிதியுதவி, மரண உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்குதல், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், நுண்ணீர் பாசனத் திட்டம், தென்னை மேம்பாட்டு திட்டம் மற்றும் ரொட்டவேட்டர் வழங்குதல், மரசெக்கு இயந்திரம், டிராக்டர். சூரிய கூடார உலர்த்தி, எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரம், வெங்காய சேமிப்பு கட்டமைப்பு, நீர் சேமிப்பு கட்டமைப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் கூடம் அமைக்க நிதியுதவி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இலவச நத்தம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்குதல்;
என மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் 7,503 பயனாளிகளுக்கு 26 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 78 கோடியே 89 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் பொது சுகாதார ஆய்வகம், நகர்புற பொது சுகாதார ஆய்வகம், துணை சுகாதார நிலையம், பவானி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 8 தளங்கள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடம், கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான பராமரிப்பு மையம், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சி.டி.ஸ்கேன் உபகரணம்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 12 கோடியே 5 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் பவானி அரசு விதைப்பண்ணையில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், சிவகிரி, நம்பியூர், தாளவாடி, பர்கூர் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்குகள், குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள்;
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், 10 கோடியே 94 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் பெருந்துறை வட்டம், வடமுகம், வெள்ளோடு கிராமம், வெள்ளோடு ஓலப்பாணையம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 19 கோடியே 46 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி கட்டடங்கள், வேளாண்மை கிடங்குகள், நியாய விலைக்கடைகள், 57 சாலை மேம்பாட்டுப் பணிகள்;
காவல் துறை சார்பில், 1 கோடியே 8 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில், ஈரோடு நகர உட்கோட்ட துணை காவல் துணை கண்காணிப்பாளர் குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம்;
என மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 122 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் 86 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கட்டடம்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சித்தோடு பகுதியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மஞ்சள் ஏற்றுமதி மையம்;
பால்வளத் துறை சார்பில் 6 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சத்தியமங்கலத்தில் கட்டு ஊறுகாய் புல் தயாரிக்கும் அலகு;
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், 70 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பவானி நகர், அருள்மிகு செல்லியாண்டியம்மன் திருக்கோயில் புதிய மரத்தேர் திருப்பணி, அந்தியூர் நகர், அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோயில் கல்தரைத்தளம் அமைக்கும் பணி மற்றும் ஈரோடு, பெரியார் நகர், நகர், அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயிலில் ஈரோடு சரக ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணி;
என மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 22 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு மாவட்டத்தைச் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் வேளாண் தொழில் முனைவோர், வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் உப இயக்கம், தேசிய எண்ணெய் வித்து மரப்பயிர்கள் இயக்கம் ஆகிய இயக்கத்தின் கீழ் உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களில் உதவிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பட்டாக்கள் வழங்குதல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், கண் கண்ணாடிக்கான உதவித் தொகை மற்றும் நலவாரிய அட்டைகள் வழங்குதல்;
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், உள்நாட்டு மீனவர்களுக்கு 50 சதவிகித மானியத்தில் மீன்பிடி வலைகள் வழங்கும் திட்டத்தில் நிதியுதவி, சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நிதி ஆதரவு திட்டத்தில் உதவிகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பெருந்துறை வட்டம், வடமுகம் வெள்ளோடு கிராமம், வெள்ளோடு ஓலப்பாளையம் திட்டப்பகுதியில் 120 அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்குதல்;
என மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 3,156 பயனாளிகளுக்கு 25 கோடியே 83 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 15 கோடியே 94 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில், சமுதாய கூடங்கள், வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள், பல்நோக்கு கட்டடங்கள், சாலைப் பணிகள், பொது விநியோக கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;
ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 6 கோடியே 31 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில், உதகை ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர் விடுதி, உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய பழங்குடியினர் நல மாணவியர் விடுதி, தேவர் சோலையில் சிமெண்ட் கான்கிரீட் சாலை, கரிக்கையூரில் தலைமையாசிரியர் குடியிருப்புக் கட்டடம்;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 25 இலட்சம் ரூபாய் செலவில் கிராம சுகாதார நல மையக் கட்டடம்;
கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், 4 கோடியே 60 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் அணிக்கொரை, கக்குச்சி, கொளப்பள்ளி போன்ற இடங்களில் கால்நடை மருத்துவமனைக் கட்டடங்கள், குருத்துக்குளி கால்நடை பண்ணை, கோத்தகிரி, மிளிதேன் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணினி அறை மற்றும் கணினி அறையுடன் கூடிய அறிவியல் ஆய்வகம்;
என மொத்தம் நீலகிரி மாவட்டத்தில் 27 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் 43 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், 1 கோடியே 19 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அதிகரட்டியில் கால்நடை மருந்தகம்
கட்டும் பணி மற்றும் குன்னூர், கேத்தியில் கிளை நூலகக் கட்டடம் கட்டும் பணி;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பந்தலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டும் பணி;
என மொத்தம் நீலகிரி மாவட்டத்தில் 6 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 புதியத் திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட் உதவிகள் வழங்கிய விவரம்
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் மூன்று சக்கர வாகனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் மாவட்டத் தொழில் மையத்தின் கீழ், கேரட் வாஷிங் யூனிட், சாக்லெட் மூலப் பொருட்கள், டிஷ்யூ காகிதம் உற்பத்தி, தானியங்கி கான்கிரிட் கலவை இயந்திரம், சாக்லெட் உற்பத்தி, போட்டோ ஸ்டுடியோ, சுற்றுலா வாகனம், டிப்பர் லாரி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் போன்ற தொழில்கள் தொடங்கிட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்குதல். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் தெப்பக்காடு யானைகள் முகாம் பணியாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த கலாச்சார இணக்கமான வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்குதல், சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந் தேயிலை ஊக்கத் தொகை வழங்குதல், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் சார்பில், சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கிக் கடன் இணைப்பு வழங்குதல்;
என மொத்தம் நீலகிரி மாவட்டத்தில் 27,337 பயனாளிகளுக்கு 43 கோடியே 79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, பி.ஆர். நடராசன், கே. சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் எம். கோவிந்த ராவ், இ.ஆ.ப., மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..