• Mon. Oct 20th, 2025

‘நெஞ்சைப் பதற வைக்கிறது..’ – புதுச்சேரி சிறுமி கொலை குறித்து நடிகர் விஜய் அறிக்கை!

Byமு.மு

Mar 6, 2024
நெஞ்சைப் பதற வைக்கிறது..’ - புதுச்சேரி சிறுமி கொலை குறித்து நடிகர் விஜய் அறிக்கை

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.