தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை–தென் மாவட்டங்களில் அதிகனமழை பொழிவு – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் – மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவர்கள் அறிக்கை 18.12.2023.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 17:12.2023 காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில், பல பகுதிகளில் அதி கனமழை பதிவாகியுள்ளது.
17:12.2023 காலை 8.30 மணி முதல் இன்று காலை (18.12.2023) காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு