• Sun. Oct 19th, 2025

நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை-அமைச்சர் திரு.எ.வ.வேலு வழங்கினார்…

Byமு.மு

Dec 15, 2023

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது, உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

நெடுஞ்சாலைத்துறையில், பணியின்போது மறைந்த ஈப்பு ஓட்டுநர், சாலைப் பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், 10 கோட்டங்களில் பணி நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 8 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை இன்று (14.12.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் இ.ஆ.ப., தலைமைச் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் திருமதி. ந.சாந்தி மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு. ஆர்.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.