ஆளுநர் உரையோடு சட்டமன்ற பேரவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தரப்பட்டு, ஜனநாயகத்தை மதிக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் அவர்களை முறைப்படி அழைத்து இன்று சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தைக் கூட்டினார்கள். கேரள ஆளுநர் அவர்கள் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்கள், ஆளுநர் உரையிலிருந்து ஒரு வார்த்தைக்கூட பேசாமல் தனது சில சொந்த கருத்துகளை பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நிச்சயமாக ஆளுநரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும்வண்ணம் இன்று அவர் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு கொடுத்த உரையில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். உரையில், உண்மைக்கு மாறாக இருக்கிறது, சரியாக இல்லை என்று அவர் கூறினால் அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு அனைத்துவிதத்திலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களோடு நாங்கள் சொல்லுகின்றபோது, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கிக் கொள்கிற சக்தியும் ஆளுநருக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. தான் ஒரு மாநிலத்தின் தலைவராக, தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது, தேசிய அளவில், தமிழ்நாட்டின் GDP உயர்ந்திருக்கிறது, விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறோம், பல துறைகளில் முதலிடத்திற்கு வந்துள்ளோம், இவற்றையெல்லாம் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளவோ, படிக்கவோ மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லாமல், பொய்யான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளிவிவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். ஆளுநர் அவர்கள் விளக்கம் கேட்டிருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருப்போம். ஆனால், அவர் ஏதும் விளக்கங்கள் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இந்த உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி ஆளுநர் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய முதலமைச்சர் அவர்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆளுநர் என்ற அந்தப் பதவிக்கு ஜனநாயகத்தில நாம் உரிய மரியாதை தரவேண்டும் என்று மதிப்புக் கொடுக்கின்ற முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், இன்று நடைபெற்ற இத்தனை நிகழ்வுகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.
தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற ஆளுநர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை முழுவதும் படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம், பேரவைத் தலைவர் தமிழில் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது, ஆனால், பேரவைத் தலைவர் அவர்கள் பேசும்போது, திடீரென்று ஆளுநர் எழுந்து சென்றுவிட்டார். இரண்டு நிமிடம் பொறுத்திருந்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்பு உரிய மரியாதையோடு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் மரியாதையை அவரே தவறவிடுகிறார்.
கேள்வி – சாவர்கர், கோட்சே குறித்து சட்டமன்றப் பேரவை தலைவர் பேசியது தொடர்பாக..
சட்டத்துறை அமைச்சர் பதில் – அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சபாநாயகர் அவர்களே தெரிவித்துள்ளார்.
கேள்வி – அடுத்தகட்டமாக ஆளுநர் உரை இல்லாமல், தெலுங்கானா அரசு செயல்பட்டதுபோல…
சட்டத்துறை அமைச்சர் பதில் – தெலுங்கானா அரசு ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நாம் ஆளுநர் அவர்களுக்கு மரியாதை கொடுத்து ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும், எனவே அவ்வாறு தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதன் அடிப்படையில் ஆளுநர் உரையோடு தொடங்கப்பட்டது. ஜனநாயகத்திற்கு எதிராக செல்கின்றவர் அல்ல, அதை மதிக்கின்றவர். ஆளுநர் பதவிக்கு மரியாதை தருகின்றவர் நம் முதலமைச்சர் அவர்கள்.
கேள்வி – குடியரசு நாள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு சுமூகமான உறவு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது, மீண்டும் இதுபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதே…
சட்டத்துறை அமைச்சர் பதில் – சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால் ஆளுநர்கள் எல்லாம் ரிமோட்கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார்கள். ரிமோட்டை இயக்குபவர்கள் எப்படி இயக்குகிறார்களோ அதன் அடிப்படையில் தான் இயங்குகிறார்கள். இவர்கள் சுயமாக இயங்க முடியாது.
கேள்வி – எங்கள் ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறாரே..
சட்டத்துறை அமைச்சர் பதில் – அவர்கள் ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா என்று பல இடங்களில் பல முறை இடம்பெற்றது, அதை எல்லாம் ஆளுநர்கள் வாசித்தார்கள். ஆனால் இந்த ஆளுநர் உரையை படித்து பாருங்கள், இந்த அரசு என்று தான் இருக்கும், இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் முதலமைச்சர் அவர்களின் பெயரே இருக்கும். அந்த அளவிற்கு எளிமையாக, விளம்பரம் இல்லாமல் நாங்கள் செய்கின்ற சாதனைகள் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையோடு, பெயருக்கு முக்கியத்துவம், விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாதனைகளுக்கு முக்கியவத்துவம் கொடுத்து இந்த ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த உரையை வாசிக்க ஆளுநருக்கு மனமில்லை.
கேள்வி – உச்சநீதிமன்றம் ஆளுநரும், முதலமைச்சரும் கலந்து பேசி முரண்களை கலைந்து, சுமூகமாக செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது குறித்து…
சட்டத்துறை அமைச்சர் பதில் – இந்த நிகழ்வை பார்த்த பிறகு, உச்சநீதிமன்றம் என்ன முடிவுக்கு வரும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் மரியாதையோடு அழைத்தோம். அந்த மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதை உச்சநீதிமன்றம் தெரிந்து கொள்ளும். எங்கள் வழக்கறிஞர்கள் அதை எடுத்துரைப்பார்கள்.
கேள்வி – இன்றைய நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கருத்து குறித்து…
சட்டத்துறை அமைச்சர் பதில் – இன்று சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தும் ஆளுநர் பற்றியும் எதிர்க்கட்சி தலைவர் ஏதாவது விமர்சனம் செய்தாரா. ஏன் என்றால் அவரால் முடியாது. கொத்தடிமை. விமர்சனம் செய்தால் அடுத்தநாள் அவர்களுக்கு ரைடு வரும். அதனால் பயந்து கொண்டுதான் பேட்டி கொடுக்க முடியும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் பயந்து கொண்டு பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் அடிமைகள் அதனால் அவர்கள் அப்படி தான் பேட்டி கொடுப்பார்கள். ஆளுநரின் நடவடிக்கை கண்டித்து அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பாஜக குறித்தும், ஆளுநர் குறித்தும் சொல்லமாட்டார்கள். ஆளுநர் உரையில் அரசு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறோம். அடுத்த வாரம் பட்ஜெட் வருகிறது. அதில் நாங்கள் செய்யப்போகிறோம் என்பதை தெரிவிப்போம். நாங்கள் அதிகமாக செய்துள்ளதை ஆளுநர் உரையில் தான் எடுத்து சொல்லமுடியும்.
கேள்வி – விதி 17 தளர்த்தி தீர்மானம் கொண்டுவந்த போது அதிமுக புறக்கணித்து, வெளிநடப்பு செய்யவில்லை, சென்ற முறையோடு ஒப்படும்போது, ஏதோ மாற்றம் வந்திருக்கிறதா…
சட்டத்துறை அமைச்சர் பதில் – அவர்கள் அதை புரிந்து கொள்வதற்குள் விதி 17 திருத்தம் முடிந்துவிட்டது, அதனால் அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
கேள்வி – ஆளுநர், முதலமைச்சர் உறவு தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு குறித்து..
சட்டத்துறை அமைச்சர் பதில் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீங்கள் சமரமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். முதலமைச்சர் அவர்களும் அதற்கு தயாராக தான் இருந்தார். ஆளுநரை சென்று சந்தித்து, பேசினார். சுமூகமான உறவு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்றைக்கு திரும்பவும் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி – தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநருக்கும் உறவு சரியில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுவது குறித்து…
சட்டத்துறை அமைச்சர் பதில் – அவர்களுக்கு டில்லி அன்று சாதகமாக இருந்தது. நினைத்ததை சாதித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரைக்கும், ஒன்றிய அரசிற்கு எதிராக இருக்கின்ற காரணத்தினால், சாதகமான சூழ்நிலை இல்லை என்றாலும்கூட, முதலமைச்சர் அவர்கள் ஆளுநரோடு அனுசரித்து செல்ல வேண்டும் என்று நினைத்தார், ஆனால் ஆளுநர் போக விரும்பவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்.
தமிழகத்தில் தான் அமைதி நிலவுகின்றது, மதநல்லிணக்கம் நிலவுகின்றது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. எனவே, வெளிநாட்டிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் வருகின்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கின்றார் என்றால், அதற்கு இங்கு நிலவுகின்ற அமைதியான சூழ்நிலை தான் காரணம்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..