தமிழக அரசின், 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையாமல் மத்திய அரசை குறை கூறும் பட்ஜெட்டாக, தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.
தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய வகையில் அமையவில்லை.
பட்ஜெட்டானது சமூக நீதி, பொருளாதாரம், நிதி, பசுமை வழிப்பயணம் உள்ளிட்ட 7 இலக்குகளை கொண்டதாக இருக்கும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பே.
ஏனென்றால் பட்ஜெட்டில் மொழி பெயர்ப்பு, தொல்லியல் அகழாய்வு, புதிய பேருந்து, கிராம நகரப்புற சாலைகள் விரிவாக்கம், நீர்நிலைகள் புனரமைப்பு, கூட்டுக்குடிநீர், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சிறு குறு நடுத்தர தொழில், சிப்காட் தொழிற்பூங்கா, மருத்துவ செலவுத் தொகை போன்றவற்றிற்கு நிதி ஒதுக்குவதும், அது பற்றி விரிவாகக் கூறுவதும் வழக்கமானது.
இது போன்ற அறிவிப்புகள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பயன் தராது. காரணம் மக்கள் வறுமையில் இருந்து விடுபடவில்லை; வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை; விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை; மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கப்படவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வரும் வேளையில் பட்ஜெட்டானது தமிழக மக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கவில்லை.
குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தமிழக தி.மு.க அரசு ஏற்கனவே கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளில் மிக முக்கிய வாக்குறுதிகளான விவசாயம் சார்ந்த, தொழிலாளர் சார்ந்த, ஓய்வூதியர்கள் சார்ந்த வாக்குறுதிகள் பற்றிய அறிவிப்புகள் முழுமையாக இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேலும் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்ற மகளிரின் எதிர்பார்ப்புக்கு எதிரான, சாமானிய மக்களின் வருவாயைப் பெருக்க உதவாத பட்ஜெட்டாகத் தான் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.
மத்திய அரசைப் பற்றி குறை கூறி மத்திய அரசின் திட்டங்களாலும் தமிழகம் வளர்ச்சி அடைவதை மறைக்க முயற்சிப்பது தமிழக அரசின் செயல்பாடாகும்.
நிதிநிலைமையை, வரி வருவாயைப் பற்றிக்கூறும் போது அதனை சமாளித்த, சமாளிக்கக்கூடிய முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பதாக தெரியவில்லை.
எனவே தமிழக அரசின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் வறுமையை போக்கக்கூடிய, வேலை வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய பட்ஜெட்டாக அமையாமல் மத்திய அரசை குறை கூறும் பட்ஜெட்டாக, தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொண்டு, தமிழக மக்களுக்காக வளமான தமிழகத்தை ஏற்படுத்த மக்களுக்கான ஆட்சியாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










