• Sun. Oct 19th, 2025

“காதி கிராப்ட் மலைத் தேன்”- அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

Byமு.மு

Jan 5, 2024
காதி கிராப்ட் மலைத் தேன்”- அமைச்சர் அறிமுகப்படுத்தினார்

சென்னை குறளகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய அலுவலகத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் கதர்கிராம தொழில் வாரியத்தின் சார்பில் “காதி கிராப்ட் மலைத் தேன்”- ஐ அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,இ.ஆ.ப., தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.