• Sat. Oct 18th, 2025

ஷில்லாங்கில் நடைபெற்ற நீர் ஹேக்கத்தான் தனிநபர் பிரிவில் சென்னை கல்லூரி முதலிடம்!.

Byமு.மு

Feb 13, 2024
ஷில்லாங்கில் நடைபெற்ற நீர் ஹேக்கத்தான் தனிநபர் பிரிவில் சென்னை கல்லூரி முதலிடம்

ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) நடைபெற்ற  நீர் ஹேக்கத்தான்  தனிநபர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த  கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பெற்றது. புதுதில்லியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசி கல்வி நிறுவனம் இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.  

நிறுவனப்பிரிவில்  டூயல் டிரையாங்கில்  பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதலிடம் பெற்றது. மேகாலய நிர்வாகக் கல்வி நிறுவனம் இரண்டாம் இடத்தையும், க்ரீன் உம்டங் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

நீர் மேம்பாடு, பாதுகாப்பு, மேலாண்மை தொடர்பான விவகாரங்களை நிவர்த்தி செய்வதையும், தீர்வு காண்பதையும் நோக்கமாக கொண்டு ஷில்லாங் நீர் ஹேகக்கத்தான் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் ஷில்லாங் பகுதிக்குக் களப்பயணம் மேற்கொண்டு உள்ளூர்  மக்களுடன்  கலந்துரையாடவும், இப்பகுதியில் எதிர்கொள்ளப்படும் தண்ணீர்ப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும்  ஈடுபடுத்தப்பட்டனர். குழு விவாத அமர்வும் நடைபெற்றது.