• Sun. Oct 19th, 2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம்!

Byமு.மு

Feb 2, 2024
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.

2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும்.

மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 20 ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்றும்,

2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 21 ஆம் நாள், புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.

  • அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர்.…


  • ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு

    ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு

    தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தங்கியிருந்து, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில் பலரும் தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் விதமாக, பணிபுரியும் பெண்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தை சமூக நலத் துறையின் கீழ்…


  • கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர் இயேசு பெருமான். இயேசு காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அனைத்து மதம், மொழி பேசுவோரும், நல்லிணக்கத்தோடும் சமஉரிமையோடும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழும், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் முதலிய பல நலதிட்டங்களை செய்து வருகிறோம். ஏராளமான கிறிஸ்தவ கல்வி…