• Sun. Oct 19th, 2025

எம்ஜிஆர் 107ஆம் ஆண்டு பிறந்த நாள்: புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்-சசிகலா

Byமு.மு

Jan 11, 2024
புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்-சசிகலா

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 17-01-2024 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், தியாகராய நகர் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர்ந்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காட்டிய அதே வழியில், மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட, புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாளினை சிறப்புடன் கொண்டாடுவோம்.

இந்த பெருமைக்குரிய நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.