• Sun. Oct 19th, 2025

முதலமைச்சர் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

Byமு.மு

Dec 26, 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி .

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நாளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (27.12.2023) சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெறவுள்ள விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்                               ரூ.171 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.

பழங்குடியினருக்கான நலவாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், ஆதிதிராவிட பழங்குடியின எழுத்தாளர்களை ஊக்குவிக்க நிதியுதவி, அருந்ததியினருக்கு சிறப்பு உள்ஒதுக்கீடு, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் போன்ற பல்வேறு திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும்
சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், அம்மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் / வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும் இவ்வரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள பள்ளிக் கட்டடங்கள், விடுதிகள் மற்றும் சமுதாயநலக்கூடங்கள்

கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 9.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர், கழிவறை மற்றும் குடிநீர் வசதி;

திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 19.84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 9 விடுதிகள்;

திருப்பூர், ஈரோடு, மதுரை, தென்காசி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 3.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள
6 ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடங்கள்;

என மொத்தம் ரூ.32.95  கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள   கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை திறந்து வைக்கவுள்ளார்.   

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்படவுள்ள புதிய விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகள்

ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள்  பயன்பெறும்  வகையில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில்
100  கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 8 விடுதிக் கட்டடங்கள்;

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4 விடுதிக் கட்டடங்கள்; 

மாநிலத்தின் 16 மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவ, மாணவியர்கள்  விடுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள 22  கற்றல் கற்பித்தல் அறைகள்;

என மொத்தம் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள விடுதிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் அறைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை அடிக்கல்  நாட்டுகிறார்.  

அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடனுதவிகள்

அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 244 பயனாளிகளுக்கு 79.35 கோடி  ரூபாய் திட்ட மதிப்பிற்கான  53.94 கோடி ரூபாய் வங்கிக் கடனுடன் கூடிய 25 கோடி ரூபாய் மானியம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு   கடனுதவிக்கான ஆணைகளை வழங்கவுள்ளார்.  

தமிழ்நாடு  பழங்குடியினர்  பட்டியலினத்தவர்  புத்தொழில்  நிதி  வழங்கும்  திட்டம்

தமிழ்நாடு  பழங்குடியினர்  பட்டியலினத்தவர்  புத்தொழில்  நிதி  வழங்கும்   திட்டத்தின் கீழ்,   ஆதிதிராவிடர்களால் நடத்தப்படும் 3 நிறுவனங்கள்  மற்றும்   பழங்குடியினரால்  நடத்தப்படும்  2  நிறுவனங்கள்,  என   மொத்தம்   
5 புத்தொழில் நிறுவனங்களுக்கு 6.50 கோடி ரூபாய் பங்கு முதலீடு வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கவுள்ளார்.  

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்குதல்

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள  வீடற்ற   தூய்மைப் பணியாளர் உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடுநகர்ப்புர  வாழ்விடமேம்பாட்டுவாரியத்தால்  நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்குத் தொகையில்  பயனாளியின்பங்குத்தொகையின் 90 சதவிகிதம்  தமிழ்நாடுதூய்மைப்பணியாளர்நலவாரியத்தின்   மானியமாக  விடுவிக்கப்பட்டு  55 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  500 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கவுள்ளார்.

பழங்குடியினருக்கு வீடுகள் வழங்கும் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில்  பின்தங்கிய  வீடற்ற  443 பழங்குடியின இருளர்  குடும்பங்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் ஆகிய வட்டங்களில் 
22.80  கோடி ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 443 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கவுள்ளார்.

முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும்   பழங்குடியினர்   சமூக,  பொருளாதார மேம்பாட்டிற்கான      தொழில்      முனைவு        திட்டத்தில்  வங்கிக் கடனுதவி

        முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும்   பழங்குடியினர்   சமூக,  பொருளாதார மேம்பாட்டிற்கான      தொழில்      முனைவு       திட்டத்தின்  (CM-ARISE) கீழ், 225    பயனாளிகள்  பயன்பெறும்  வகையில்,   16.76    கோடி ரூபாய்   திட்ட மதிப்பீட்டிலான 10.65 கோடி ரூபாய் வங்கிக் கடனுடன்  கூடிய 5.80  கோடி ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். 

பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டம்

பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ்,  பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக,  பிரத்யேகமான வருவாய் ஈட்டும் திட்டங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தும வகையில், வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்குதல், சூரியமின் சக்தியுடன் இயங்கும் அரவை இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகள், என மொத்தம் 1 கோடி ரூபாயில்,
5 பழங்குடியின சங்கங்கள் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகளை வழங்கவுள்ளார்.  

புதிரை வண்ணார்  பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவி

விளிம்பு நிலையில் உள்ள புதிரை வண்ணார் இன மக்களுக்கான, அடிப்படை சமூக  பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டு, அதன் மூலம் கண்டறியப்பட்ட  10   புதிரை வண்ணார்  பயனாளிகளுக்கு  44.16 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பிற்கான,  27.98 இலட்சம் ரூபாய் வங்கிக் கடனுதவியுடன் கூடிய 15.45  இலட்சம் ரூபாய் மானியம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்குதல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ், மாநில அரசு வகுக்கும் எதிர்பாரா திட்டத்தின்படி (Model Contigency Plan) தீவிர வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் 50  வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், சமையலர் ஆகிய பணியிடங்களுக்கான  பணி  நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கவுள்ளார்.

அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உட்பயிற்சி உதவித்தொகை வழங்குதல்

அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயின்று வரும் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உட்பயிற்சி  (Internship) காலங்களுக்கான உதவித்தொகை 1 கோடி ரூபாய்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கவுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்குதல்

வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித்தொகைத் வழங்கும் திட்டத்தின் கீழ்,  ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு 36 இலட்சம் ரூபாய்க்கு மிகாமலும், ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய்க்கு மேல் 12 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமான உள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு 24 இலட்சம் ரூபாய்க்கு மிகாமலும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்,  வெளிநாட்டில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்காக இந்த ஆண்டு 30 மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கவுள்ளார்.