• Sun. Oct 19th, 2025

மிக்ஜாம் புயல் பாதிப்பு : 4 மாவட்ட வணிகர்களுக்கு ஜிஎஸ்டிஆர்-3B தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்…

Byமு.மு

Dec 21, 2023
மிக்ஜாம் புயல் பாதிப்பு : 4 மாவட்ட வணிகர்களுக்கு ஜிஎஸ்டிஆர்-3B தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயலின் இடர்பாடுகளை களைய பல்வேறு தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017-இன் கீழ் நவம்பர் 2023 மாதத்திற்கான GSTR-3B படிவத்தினை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாள், டிசம்பர் 20, 2023-இல் இருந்து டிசம்பர் 27, 2023 வரை நீட்டித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள வருவாய் வணிகர்கள், நவம்பர் மாதத்திற்கான மாவட்டங்களில் உள்ள GSTR-3B படிவத்தினை நீட்டிக்கப்பட்ட டிசம்பர் 27, 2023 வரை தாக்கல் செய்வதற்கு தாமதக் கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியதில்லை.

.