• Sun. Oct 19th, 2025

மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு!

Byமு.மு

Jan 8, 2024
மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு

நமது #சேப்பாக்கம் டிரிப்ளிகேன் தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறது.

பாரம்பரியமிக்க இம்மருத்துவமனையின் சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, அம்மருத்துவமனைக்கு அருகே கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

ரூ.30 கோடி மதிப்பீட்டில் பல வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இதன் கட்டுமானப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

இந்தப் பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் – அலுவலர்களைக் கேட்டுக்கொண்டோம்.