அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாலமாகத் திகழ வேண்டும். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி ஆய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்அவர்கள் அறிவுரை
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் இன்று (8.3.2024) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணியினை மேம்படுத்தும் பொருட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டிற்கான பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி இன்று(8.3.2024) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அலுவலர்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையுரை ஆற்றியபொழுது தெரிவித்ததாவது,
இன்று மகளிர் தினம். இந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்திற்கு வருகைதந்துள்ள மகளிர் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலை மகளிர் தினத்தை தினத்தை ஒட்டி, கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பத்திரிகைத் தொண்டுகளை போற்றும் வகையில் முதலமைச்சர் அவர்கள் தோற்றுவித்துள்ள கலைஞர் எழுதுகோல் விருது இரண்டு ஆண்டுகளாக மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்று மதுரையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.என்.சாமி அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு மக்களுக்குப் பல்வேறு புதிய திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. அத்திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிய, “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை இரண்டு நாட்களுக்குமுன் முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.
பத்திரிகையாளர்களை மாதத்திற்கு ஒருமுறை அழைத்துக் கொண்டு திட்டத்தினால் பயன் அடைந்தவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டு அவற்றை வெற்றிச் செய்திகளாக வெளியிட வேண்டும்.
விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. பயன்பெற்ற விவசாயிகளைக் கண்டு திட்டத்தின் பயன் குறித்த அவர்களின் கருத்தை அறிந்து பத்திரிகைகளில் விரிவாக வெளிவர – வெற்றிச் செய்திகளாக வெளிவர அதுவே, “நீங்கள் நலமா” திட்டமாக வெளிவர நீங்கள் சிறப்பாகச் செயல்படவேண்டும்.
அந்த வெற்றிச் செய்திகளைக்கூட இனி, “நீங்கள் நலமா” என்ற பெயரில் மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.
அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் எல்லாம் மக்களிடம் சென்று சேரவேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு நிறைய பணிகள் உள்ளன. முதலமைச்சர் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், உள்ளிட்டோர் மாவட்டங்களுக்கு வந்து பணி ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அவர்களுடைய வருகை தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகம் உள்ளது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர்களின் அறிவுரைகளை ஏற்று ஒருங்கினைந்து, அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெறவும், செய்தி வெளியீடுகள் முறையாக வெளிவரவும் கவனத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும்.
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அரசுக்கும் மாவட்டத்திற்கும் மக்களுக்கும் செய்திகளை உறவுப் பாலமாக அமைந்து நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் “மக்களுடன் முதல்வர்” செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாகிய நீங்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணி செய்து வருகிறீர்கள். மாவட்ட வருவாய் அலுவலர் கூறும் பணிகளையும் நிறைவேற்றி வருகிறீர்கள். அந்த வகையில் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாலமாக இருக்க வேண்டிய பெரும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும். திட்டங்கள் பற்றிய செய்திகளும், மக்கள் திட்டங்களால் பெறும் பயன்களும் ஊடகங்களில் செய்திகளாக வரவேண்டும்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பல அரங்கங்கள் கட்டப்படுகின்றன. நம்முடைய கலைவாணர் அரங்கம் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மிகவும் சிறந்த முறையில் பயன்படுகிறது. அதுபோல கட்டப்படுகின்ற அரங்கங்களும் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் எதிர்காலத்தில் அமைந்திட வேண்டும்.
உங்கள் மாவட்டங்களில் அமைந்துள்ள அரங்கங்கள், மணிமண்டபங்கள், சிலைகள் அனைத்தையும் தவறாமல், முறையாகப் பராமரித்திட வேண்டும் என்பது உட்பட உங்கள் பணிகள் அனைத்தையும் நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை துறை செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையுரை ஆற்றியபொழுது: செய்தி மக்கள் தொடர்பு துறையின் பெயரே இந்தத் துறையின் பணிகள் என்ன என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களும், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களும் பாலமாக இருத்தல் வேண்டும். உங்கள் தலையாய கடமை இது.
அரசு யாருக்காக திட்டங்களை நிறைவேற்றுகிறதோ அவர்களிடம் திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் அரசு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள், துணை இயக்குநர்கள், மண்டல இணை இயக்குநர்கள் என்றெல்லாம் பொறுப்புகளை உருவாக்கி இப்பணிகளை நிறைவேற்றவேண்டும் என்று இத்துறையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அரசாங்கம் நம்மிடம் எதிர்பார்க்கும் பணிகளை நாம் கட்டாயம் மிகுந்த பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும். மக்கள் தொடர்பு அலுவலர்கள், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் இடையில் இணக்கமான நல்ல உறவு இருத்தல் வேண்டும். அது செய்தி மக்கள் துறையில் சிறப்பான பணிகளுக்கு உறுதுணையாக அமையும் என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரையாற்றி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணிகளான அரசின் திட்டங்கள் குறித்த வெற்றிக் கதைகளைப் பத்திரிகைகளில் வெளிவரச் செய்தல், அரசின் திட்டங்கள் குறித்துச் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு, அவை தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரச் செய்தல், சமூக ஊடகங்களைக் கையாளுதல், தமிழரசு மாத இதழ் சந்தாக்களை அதிகரித்தல் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ். செல்வராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
மேலும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்காகப் புத்தாக்கப் பயிற்சி பிற்பகலில் நடத்தப்பட்டது. இதில், சமூக ஊடகங்களைக் கையாளுதல் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு உண்மை அறியும் பிரிவின்(Fact Check Unit) பணி இயக்குநர் (Mission Director) அயன் கார்த்திகேயன் அவர்களும், அலுவலக நடைமுறை மற்றும் நன்னடத்தை விதிகள் என்ற தலைப்பில் மனித வள ஆலோசகர் எ. சந்திரா அவர்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற தலைப்பில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகர் எஸ். ராஜேந்திரன் அவர்களும் பயிற்சி அளித்தனர்.
இக்கூட்டத்தில் மண்டல இணை இயக்குநர்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றக்கூடிய கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள், மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய மக்கள் தொடர்பு அலுவலர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களும், தலைமையிடத்தில் உள்ள இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், சார்புச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பிரிவு அலுவலர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..