தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் இன்று 07.03.2024 சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூரில் நிறுவப்பட்டுள்ள கபிலர் நினைவுத் தூண், தமிழ்ப் பல்கலைக்கழகக் புதிய கட்டடங்கள் கல்வெட்டு, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புவெளி நூல்களை வெளியிட்டு அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் 25 விருதுகளோடு மொத்தம் ரூ.5,22,77,000/- மதிப்புக்கான தொகைகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயற்படுத்தி அரசுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். அவ்வகையில் பின்வரும் நிகழ்ச்சிகள் சான்றாகும்.
18.07.2023ஆம் நாளன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டது.
31.10.2023ஆம் நாளன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்களின் அலுவலக அறையில் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது 4 ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
19.12.2023ஆம் நாளன்று மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு நேர்வாக 44 தமிழறிஞர்களுக்கு ரூ.10,000/-க்கான காசோலை வழங்கப்பட்டது.
12.01.2024ஆம் நாளன்று அயலகத் தமிழர் நாளில் சென்னை வர்த்தக மையத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்பட்டன.
01.02.2024ஆம் நாளன்று திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு தமிழறிஞர்களுக்கு விழாவினை முன்னிட்டு சிறப்பு நேர்வாக 116 ரூ.10,000/-க்கான காசோலை வழங்கப்பட்டது.
03.02.2024ஆம் நாளன்று விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்வி கலையரங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் திருக்குறள் முற்றோதல் செய்த பள்ளி மாணாக்கர்கள் 31 பேருக்கு குறள் பரிசுத்தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.15,000/-க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அரசாணை ஆகியவை வழங்கப்பட்டன.
12.02.2024ஆம் நாளன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழறிஞர்கள் ஐவரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டமைக்கு அவர்களின் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத்தொகை வழங்கப்பட்டது.
14.02.2024ஆம் நாளன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டிற்குத் தெரிவு செய்யப்பெற்ற நூல்களின் நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
22.02.2024ஆம் நாளன்று சென்னை, அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான 38 தமிழ்ச்செம்மல் விருதுகள், 10 சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகள் உட்பட 63 விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேற்கூறிய 9 நிகழ்வுகளோடு இன்று 07.03.2024 சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக சங்கப் பெரும் புலவர் கபிலர் நினைவாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ரூ.13.24 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நினைவு தூணையும் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ.5,03,57,000/- (ரூபாய் ஐந்து கோடியே மூன்று இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் மட்டும்) மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாமன்னன் இராசராசச் சோழன் பன்னோக்குக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், கூடுதல் மகளிர் விடுதி, பழைய ஆடவர் விடுதி முதல் தளம் ஆகிய நான்கு கட்டடங்கள் மற்றும் ‘குறளோவியம்’ என்ற பெயரில் ஒலி-ஒளிப் பதிவுக்கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுகளைத் திறந்து வைத்தார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாயிலாக, பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிடுதல் திட்டத்தின் கீழ் அகத்திணை, புறத்திணை, அறஇலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், கவிதைகள், புதுக்கவிதைகள், நாடகம் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஆகிய தலைப்புகளில் நூல்கள் தெரிவுசெய்யப்பட்டு (ரூ.10,00,000) ரூபாய் பத்து இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஒலி நூல்கள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2023 செப்டம்பர்த் திங்கள் 20ஆம் நாள் அன்று நடைபெற்ற கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அறிவித்த அறிவிப்பினை செயற்படுத்தும் பொருட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் 35 தமிழறிஞர்களிடமிருந்து கவிஞர் தமிழ்ஒளி தொடர்பான கட்டுரைகள் பெறப்பட்டு ‘கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புவெளி’ எனும் தலைப்பில் அணியமாக்கப்பட்ட நூல் ஆகியவற்றை வெளியிட்டார்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வாயிலாக, 2023ஆம் ஆண்டிற்கான தேவநேயப் பாவாணர் விருதுக்கு தெரிவு செய்யப்பெற்ற விருதாளர் ப. அருளி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருதுத் தொகை ரூ.2,00,000/-, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான வீரமாமுனிவர் விருதுக்கு தெரிவு செய்யப்பெற்ற விருதாளர் முனைவர் ச. சச்சிதானந்தம் அவர்களுக்கு விருதுத் தொகை ரூ.2,00,000/-, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான நற்றமிழ்ப் பாவலர் விருதுக்கு மரபுக் கவிதை வகைப்பாட்டில் தெரிவு செய்யப்பெற்ற அரிமாப் பாமகன் அவர்களுக்கும் புதுக் கவிதை வகைப்பாட்டில் தெரிவு செய்யப்பெற்ற கௌதமன் நீல்ராசு அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து ரொக்கப் பரிசு ரூ.50,000/- மற்றும் ரூ.25,000/- மதிப்பிலான தங்கப் பதக்கம், கேடயம், தகுதியுரை ஆகியவை வழங்கிச் சிறப்பித்தார்.
2023ஆம் ஆண்டிற்கான நற்றமிழ்ப் பாவலர் விருதுக்கு தெரிவு செய்யப்பெற்ற செல்வி ப. பவித்ரா (அரியலூர்), நந்திவரம் சம்பத்குமார் (செங்கல்பட்டு), பி. தமிழழகன் (சென்னை), நா. நாகராஜ் (தருமபுரி), செல்வன் செ. மோகனபூபதி (திண்டுக்கல்), சிவசங்கரன் (ஈரோடு), ந. ஸ்டாலின் (கரூர்), செல்வன் ச. ஜாஹீர் உசேன் (மதுரை), ம.அ. சையத் அசன் (6T) பாரிதாசன் (இராணிப்பேட்டை), செல்வி கு. சுமித்ரா (சிவகங்கை), ச. பெத்தையா (தஞ்சாவூர்), ப. பாண்டியராசன் (தேனி), செல்வன் சா. செல்வகுமார் (திருப்பத்தூர்), முத்து. சுப்பிரமணியன் (திருப்பூர்), முனைவர் ப. இராசசேகர் (திருவள்ளுர்), செல்வி அ. அபிபெல்வியா (திருவண்ணாமலை), செல்வன் தே. தன்ராஜ் (திருச்சிராப்பள்ளி), த. இராம்குமார் (தூத்துக்குடி), முனைவர் பா. சம்பத்குமார் (வேலூர்), செல்வன் ஐ. தமிழன் (விழுப்புரம்), செல்வன் ௧. சதீஸ்குமார் (விருதுநகர்) ஆகிய 21 அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு ரூ.20,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆக மொத்தம் 25 அறிஞர்களுக்கு (ரூ.9,20,000) ஒன்பது இலட்சத்து இருபதாயிரம் மதிப்பிற்கான தொகையை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (பொ.) ஸ்டாலின் கோபிநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










