• Sat. Oct 18th, 2025

மோட்டார் வாகன பராமரிப்புத் துறைக்கு, தேர்வு செய்யப்பட்ட, பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Byமு.மு

Feb 28, 2024
மோட்டார் வாகன பராமரிப்புத் துறைக்கு, தேர்வு செய்யப்பட்ட, பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறை சார்பில் ரூ.70.73 இலட்சம் செலவில் நவீனமயமாக்கப்பட்ட சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் அரசு தானியங்கி பணிமனைகளை திறந்து வைத்து, தானியங்கி பொறியாளர், பொது முதலாள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (28.2.2024) சென்னை, கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறையின் சார்பில் 70 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் அரசு தானியங்கி பணிமனைகளை திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தானியங்கி பொறியாளர், பொது முதலாள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறையால் அனைத்து அரசுத் துறை வானங்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறை ஊர்திகளுக்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் 20 மாவட்ட தலைநகரங்களில் அரசு தானியங்கி பணிமனைகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையின் பழுதுபார்க்கும் பணியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பழுது நீக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும், அதற்குத் தேவையான சிறப்பு கருவிகள் மற்றும் சாதனங்களை நிறுவுவதன் வாயிலாக சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

செயல்படும் அரசு தானியங்கி அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகளுக்காக 70 இலட்சத்து 73

ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு இன்றையதினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தானியங்கி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பொதுமுதலாள் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். போக்குவரத்துத் துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.