• Sun. Oct 19th, 2025

PACR அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு!

Byமு.மு

Jan 5, 2024
PACR அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு

இராஜபாளையம் தொகுதியில் (05.01.2024) இன்று PACR அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து தற்போது அதற்கான பணி தொட்ர்ந்து நடைபெற்று வருகிறது, அப்பணியை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்,

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள்,, இராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்தப்படும் என அறிவிப்பு வெளியானது முதல் இன்றுவரை மருத்துவமனையின் பணிகளை கண்காணித்துவருகிறேன், அதன் தொடர்ச்சியாக இன்றும் மருத்துவமனையின் கட்டிடப் பணியையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன் எனவும், தற்போது தரைத்தளத்துடன் இரண்டாவது மாடிக்கட்டிடப்பணி முடிவடைந்து மூன்றாவது மாடிக்கட்டிடப்பணி நடைபெற்றுவருகிறது மேலும் இன்னும் 3 மாதத்திற்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது எனக்கூறினார்,

மேலும் பொதுமக்களை உயர்சிகிச்சைக்காக மதுரை அல்லது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இனிமேல் அனுப்பாமல் அனைத்து உயர்தர கருவிகளுடன் உயர்தர சிகிச்சையுடனும் இருதய அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஆஞ்சியோ கருவி சிகிச்சை, MRI ஸ்கேன் வசதி உள்பட உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் PACR அரசு மருத்துவமனையில் அமைக்கப்படவதை எனது லட்சிமாக கொண்டு செயல்பட்டு வருகிறேன் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய MLA அவர்கள், PACR அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின் பிரிவில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் MLA அவர்கள் சாப்பிட்டு பார்த்து தெரிந்து கொண்டதில் உணவின் தரம் குறைவாக உள்ளது இனிவரும் நாட்களில் உணவு தரமாக நோயாளிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் அடுத்தமுறை தீடீரென ஆய்வுக்கு வருகையில் உணவின் தரத்தை ஆய்வு செய்வேன் அப்போதும் உணவின் தரம் குறைவாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சமையாளர்களை MLA அவர்கள் கண்டித்தார்.

இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் மாரியப்பன் அவர்கள் சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள், செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.