தென்காசி சாலையில் அமைந்துள்ள தேவதானம் விதைப்பன்னையில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு உயர்ரக நெல்ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற நெற்பயிர்கள் மற்றும் இதர நெற்பயிர்களையும் பார்வையிட்டார்.

மேலும் ஆய்வின் போது வேளாண்மை அதிகாரி அவர்கள், MLA அவர்களிடம் வாய்க்கால் வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை கூறினார்கள். அதற்கு பதலளித்த MLA அவர்கள் விருதுநகர் மாவட்டத்திலே ஒரே ஒரு விதைப்பன்னை மட்டும் உள்ளதாகவும் அதுவும் நமது இராஜபாளையம் தொகுதி தெற்கு தேவதானம் ஊராட்சியில் அமைந்துள்ளது அதன் வளர்ச்சிக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் எனவும் மேலும் வேளாண்மை அதிகாரிகள் கூறிய கோரிக்கைகளை ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாகவும் வேளாண்மைதுறை அமைச்சர் அவர்களிடமும் கோரிக்கையை மனு அளித்து வருகின்ற சட்டமன்ற கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இந்நிகழ்வில் சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன், வேளாண்மை அலுவலர் சோமசுந்தரம், உதவி வேளாண்மை அலுவலர் மாரீஸ்வரி, உதவியாளர் ராஜலட்சுமி, இளநிலை உதவியாளர் சத்தியநாதன் மற்றும் விதைப்பன்னை ஊழியர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.