நேற்று எனது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய என் உயிரினும் மேலான கழக நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும், பிற மாவட்டங்களில் முதியோர் மற்றும் ஆதவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களில் நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் அன்னதானத்தையும் கழகத்தினர் வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
என்னுடைய பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு செய்திருக்கும் இந்த உதவி எந்நாளும் தொடர வேண்டும் என்பதை இந்நேரத்தில் கழகத்தினருக்கு அன்பு வேண்டுகோளாய் வைக்கின்றேன்.