• Sun. Oct 19th, 2025

நல்லகண்ணு பிறந்தநாள்: வி.கே.சசிகலா வாழ்த்து!

Byமு.மு

Dec 26, 2023
நல்லகண்ணு பிறந்தநாள்: வி.கே.சசிகலா வாழ்த்து

மதிப்பிற்குரிய ஐயா R. நல்லகண்ணு அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயா நல்லகண்ணு அவர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு தன்னலமின்றி அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர். தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டும், சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டும் அயராமல் தொண்டாற்றி வருவதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

பெரியவர் . R. நல்லகண்ணு அவர்கள், நூறாண்டுகளை கடந்தும் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.