2023-2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுகள் தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த திரு கோ. சித்தர், அவர்களுக்குமுதல்பரிசும். திருப்பூர் மாவட்டம். பொங்கலூரைச் சேர்ந்த கே.வெயழனிச்சாமி அவர்களுக்கு இரண்டாம் பரிசும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த கு. எழிலன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்படுகிறது.
2023-2024-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் வேளாண்மை நிதிநிலை வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்ககவிவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை. சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயிகள் விவரம் பின்வருமாறு:-
திருகோ.சித்தர், மகர்நோன்புச்சாவடி. தஞ்சாவூர் மாவட்டம் அவர்களுக்கு முதல்பரிசாக ரூ.2.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம். கே.வெ.பழனிச்சாமி, பொங்கலூர், திருப்பூர் மாவட்டம் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ1.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் கு. எழிலன், அச்சுக்கட்டுகிராமம். காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.1.00 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.