சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் நடைபெற்ற ஆட்சிமொழி சட்ட வாரவிழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் திருமதி இரா.தாரணி, மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்கள் திரு.அ.முகமது ஜியாவுதீன், திரு.ச.கோபி ரவிகுமார், திரு.வி.வில்ஸ்றோ டாஸ்பின், பகுதி நேர உறுப்பினர் திரு.சு.முரளி அரூபன், பகுதிநேர உறுப்பினர் திருமதி. கனிமொழி மதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.