2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்” என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி.
இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும் என்றும், எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்றும் தனது டிவிட்டர் பதிவில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்தக் கொள்கையிலிருந்து தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டினை எதிர்த்து 14-02-2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின்மீது பேசிய என். தளவாய் சுந்தரம், “2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2034 ஆம் ஆண்டில் முடிவடையும் 10 ஆண்டுகளுக்குள்ளான கிட்டத்தட்ட 10 கோரிக்கைகள் அளித்திருக்கிறோம். Committee அவற்றை பரிசீலனை செய்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, அதனை மத்திய அரசிற்கு அனுப்பி, அதன் மூலமான எங்களுடைய சாதகங்களையும், பாதகங்களையும் பார்க்கின்ற நிலை வரும்பொழுது, நாங்கள் “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்கின்ற சூழ்நிலை உருவாகும்பொழுது, குழு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமானால், நாங்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம்” என்று அரைகுறையாக, மழுப்பலாக குழப்பி இருக்கிறார்.
27 அமாவாசை என்று 2022-ல் கூறியது இப்போது 2034-க்கு சென்றுவிட்டது. இது மட்டுமல்லாமல், இந்தத் தீர்மானம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, தி.மு.க.வுடன் கைகோர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எந்த தி.மு.க. என்கிற தீயசக்தியை எதிர்த்து மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள் கட்சியை தொடங்கினாரோ, எந்தத் தீயசக்தியை எதிர்த்து மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தி.மு.க.வுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம்.
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஓர் இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2016 ஆம் ஆண்டு முழங்கியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக தி.மு.க.விடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










