• Sun. Oct 19th, 2025

நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு:கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை!

Byமு.மு

Jan 29, 2024
நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு:கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்ற மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை – புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனை நடத்தினோம்.

சிவகங்கை தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட- ஒன்றிய – நகர – பேரூர் -கிளைக்கழக நிர்வாகிகள் – உள்ளாட்சி பிரதிநிதிகள் போன்றவர்களிடம், தொகுதியில் உள்ள சூழல்களைக் கேட்டறிந்தோம்.

தொகுதிப் பார்வையாளர்கள் – பாக அளவிலான பொறுப்பாளர்கள் – கழக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மக்கள் மத்தியில் நிலவும் நம்முடைய ஆதரவு அலையை வாக்குகளாக்க உழைக்க வேண்டுமென உரையாற்றினோம்.