• Sat. Oct 18th, 2025

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

Byமு.மு

Apr 4, 2024
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு: தேர்தல் அதிகாரி

ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; வேட்பாளர்கள் பணம் கொடுக்கக் கூடாது; வாக்காளர்களும் பணம் வாங்கக் கூடாது. 85 வயதுக்கு மேற்பட்டோர் 18ம் தேதி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். தபால் வாக்குகளை பெற வாக்குப்பதிவு அலுவலர்கள் இரண்டு முறை வீட்டுக்கு வருவார்கள். இரண்டு முறையும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்கள் வாக்குப்பதிவு நாளில் நேரில் வாக்களிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.