• Sun. Oct 19th, 2025

முதல்வர் ஸ்டாலினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி..

Byமு.மு

Dec 25, 2023
PM Modi calls CM Stalin

தமிழ்நாட்டில் ஏற்பட்ட இரட்டைப் பேரிடரிலிருந்து மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உறுதி

மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனே, தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறிய மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் என்னை அழைத்திருந்தார்.

கடும் நிதி நெருக்கடிக்கிடையே மாநில அரசு மேற்கொண்டு வரும் பெரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவரிடம் விளக்கிக் கூறி, ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியைக் கோரினேன்.

இந்த இரட்டைப் பேரிடரில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் என உறுதியளித்த மாண்புமிகு பிரதமர் அவர்கள், வெள்ளப் பாதிப்பை மதிப்பிட மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.