தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 38 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் சென்னை மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 09.01.2024 அன்று எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு 10.01.2024 அன்று சென்னை மாநிலக் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர். மாநில அளவிலான போட்டிகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 23.01.2024 அன்றும் கல்லூரி மாணவர்களுக்கு 24.01.2024 அன்றும் நடைபெறவுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான பரிசுத்தொகை விவரம் பின்வருமாறு
மாவட்டப்போட்டி
பரிசு | கவிதைப்போட்டி | கட்டுரைப்போட்டி | பேச்சுப்போட்டி |
முதல் பரிசு | 10,000/- | 10,000/- | 10,000/- |
இரண்டாம் பரிசு | 7,000/- | 7,000/- | 7,000/- |
மூன்றாம் பரிசு | 5,000/- | 5,000/- | 5,000/- |
மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான பரிசுத்தொகை விவரம் பின்வருமாறு
மாநிலப் போட்டி
பரிசு | கவிதைப்போட்டி | கட்டுரைப்போட்டி | பேச்சுப்போட்டி |
முதல் பரிசு | 15,000/- | 15,000/- | 15,000/- |
இரண்டாம் பரிசு | 12,000/- | 12,000/- | 12,000/- |
மூன்றாம் பரிசு | 10,000/- | 10,000/- | 10,000/- |
38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் நேரத்தில் அறிவிக்கப்பெறும்.