• Mon. Oct 20th, 2025

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!.

Byமு.மு

Mar 13, 2024
மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு வாபஸ் ஆனதை அடுத்து பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ.வாக தொடர்வதை அடுத்து மீண்டும் பொன்முடி அமைச்சராகிறார். இன்று மாலை அல்லது நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்ட மன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஆளுநர், தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலை அல்லது நாளை அமைச்சராக பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.