• Sun. Oct 19th, 2025

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பில் திட்டங்கள்

Byமு.மு

Jan 5, 2024
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பில் திட்டங்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1933.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.278.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள 2 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 121 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1,335 கோடியே 86 இலட்சம் ரூபாய் செலவிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 258 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 56 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 78 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவிலும் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 278 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 2 புதிய பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்ககத்தில் 121 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.1335.86 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை,  கந்திலி,  திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 759 ஊரக குடியிருப்புகளுக்கு 182 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்;

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தைச் சார்ந்த நல்லாத்தூர், என்.என். கண்டிகை மற்றும் பூனிமாங்காடு ஊராட்சிகளில் உள்ள நல்லாத்தூர் மற்றும் 15 குடியிருப்புகளுக்கு 4 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்;

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தைச் சேர்ந்த 134 ஊரக குடியிருப்புகளுக்கு 91 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டம்;

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 ஊரக குடியிருப்புகள் மற்றும் திருவிடைமருதூர் மற்றும் வேப்பத்தூர் பேரூராட்சிகளைச் சார்ந்த 2  குடியிருப்புகளுக்கு 117 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்;

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 756 ஊரக குடியிருப்புகளுக்கு 440 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டம்;

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 442 ஊரக குடியிருப்புகளுக்கு 412 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்;

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 144 ஊரக குடியிருப்புகளுக்கு 87 கோடியே 68 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம்;

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளிப்பத்து ஊராட்சியில் உள்ள 4 ஊரக குடியிருப்புகளுக்கு  1 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டம்;

என மொத்தம் 1,335 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 9.15 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ரூ.204.36 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கத்தை சார்ந்த இந்திரா நகர், மேக்ரோ மார்வெல், சஹாஜ் என்கிளேவ், சேது லட்சுமி நகர், சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 3.33 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றும் வகையில் 22 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாளச் சாக்கடை திட்டம்;

மாதவரத்தை சார்ந்த லட்சுமிபுரம், மாதவரம் பூஸ்டர் , மாதவரம் பேருந்து நிலையம், கூட்டுறவு நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 27 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் வகையில் 44 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம்;

நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், கங்கையம்மன் கோயில் தெரு பகுதிக்கு நாளொன்றுக்கு 3.1 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் 26 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாள சாக்கடைத் திட்டம்;

நெற்குன்றத்தை சேர்ந்த ஏ.வி.கே. நகர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நகர் பகுதிகளுக்கு 11 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்;

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட கண்ணன் காலனியில் நாளொன்றிற்கு 5 மில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றும் வகையில்
10 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 MLD திறன் கொண்ட கழிவுநீரகற்று நிலையம்  மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள்;

அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம் ‘B’   கழிவுநீர் உந்துநிலையம் முதல் வில்லிவாக்கம் தடாகம் கழிவுநீர் உந்துநிலையம் வரை உள்ள 300 மி.மீ. விட்டமுள்ள வார்ப்பிரும்பு உந்துகுழாய்களை நாளொன்றுக்கு 3.50 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் 5 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் 450 மி.மீ. விட்டமுள்ள வார்ப்பிரும்பு கழிவுநீர் உந்துகுழாய்களாக விரிவாக்கம் செய்யும் பணி;

                இராமாபுரத்தை சார்ந்த பாரதி சாலை, அம்மன் நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளொன்றிற்கு 10.35  மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றும் வகையில்
32 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதாளச் சாக்கடை திட்டம்;

                இராமாபுரத்தை சார்ந்த பணிமனை 154 மற்றும் 155 பகுதிகளுக்கு நாளொன்றிற்கு 26.58  மில்லியன் லிட்டர்குடிநீர் விநியோகிக்கும் வகையில்
52 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விரிவான குடிநீர் வழங்கும் திட்டம்;

                என மொத்தம் 204 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் சுமார் 5.04 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் முடிவுற்ற குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் ரூ.258.11 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

மாநகராட்சி பகுதிகளான ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி – குதுப்பாபள்ளம் மற்றும் பாலக்கரை, தூத்துக்குடி,  திருப்பூர், வேலூர், காஞ்சிபுரம், கரூர், திண்டுக்கல், சேலம், ஓசூர், நாகர்கோயில், தாம்பரம் – குரோம்பேட்டை மற்றும் சேலையூர், திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் 52 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள
20 அறிவுசார் மையங்கள்;

நகராட்சி பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூர், குன்றத்தூர், திருக்கோவிலூர், நாமக்கல், குமாரபாளையம், தருமபுரி, பொள்ளாச்சி, உதகமண்டலம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மணப்பாறை, பெரம்பலூர், இராமநாதபுரம், சங்கரன்கோவில், கொல்லங்கோடு, விருதுநகர், அருப்புக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கோவில்பட்டி, மேட்டுப்பாளையம், நாகப்பட்டினம், இராணிப்பேட்டை, தேனி – அல்லிநகரம், திருவண்ணாமலை, திருமங்கலம், விழுப்புரம், திருச்செங்கோடு, திருவத்திபுரம், திருவாரூர், திருப்பத்தூர், திண்டிவனம், பழனி, துறையூர், காரைக்குடி, கொடைக்கானல், பட்டுக்கோட்டை, தாரமங்கலம், திருவில்லிபுத்தூர், உளுந்தூர்பேட்டை, அரக்கோணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 76 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள
43 அறிவுசார் மையங்கள்;

சிதம்பரத்தில் 48 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடம், கோயம்புத்தூரில் 3 கோடி ரூபாய் செலவில் அனுபவ மையம், தூத்துக்குடியில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கற்றல் மையம்; திருப்பூரில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி மண்டல அலுவலகக் கட்டடம்; திருப்பூர் மாவட்டம் – பல்லடத்தில் 3 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் பாலம்;

                நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் – வால்பாறை, சிவகாசி, தென்காசி, காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டம் – பல்லடம், திருப்பூர் – மொராஜிதேசாய் நகர், தியாகி பழனிசாமி நகர், முருகம்பாளையம், தோட்டத்துப்பாளையம், பூலுவப்பட்டி, மண்ணரை, லட்சுமி நகர், மங்கலம் சாலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணப்பாறை, துறையூர், தேனி மாவட்டம் – பெரியகுளம், சின்னமனூர், தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, தூத்துக்குடி – சிதம்பரம் நகர், லூர்தாம்பாள்புரம், பாத்திமா நகர், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, நாகர்கோயில் – வடிவீஸ்வரம், தொல்லவிலை, வட்டவிலை, கிருஷ்ணன் கோவில், வடசேரி, ஆகிய இடங்களில்  14 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 24 நகர்ப்புற சுகாதார நல மையங்கள், 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்; 

                வேலூர் மாவட்டம்-பேரணாம்பட்டு, நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோடு, தேனி மாவட்டம் – கம்பம், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில்
4 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 பூங்காக்கள்;

                நாமக்கல் மாவட்டம் – நாமக்கல் மற்றும் ராசிபுரம், ஈரோடு மாவட்டம் – புஞ்சை புளியம்பட்டி, திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி, தேனி மாவட்டம் – கம்பம் ஆகிய இடங்களில் 22 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 5 சந்தைகள்;

                திருப்பூரில் 30 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்; கோயம்புத்தூரில் 40 கோடி ரூபாய் செலவில் குறிச்சி ஏரிக்கரை புதுப்பிக்கும் பணி; காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 93 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வீடற்றவர்களுக்கான 2 தங்குமிடங்கள்;

                சேலம் – அயன் திருமாளிகை தொடக்கப் பள்ளி மற்றும் சின்ன திருப்பதி நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்; புதுக்கோட்டை மாவட்டம் – அறந்தாங்கியில் சூரியமூர்த்தி குளம் மற்றும் கோபாலசமுத்திரம், கோயம்புத்தூர் மாவட்டம் – பொள்ளாச்சி, சேலம் – கொல்லன்பட்டறை ஆகிய இடங்களில் 1 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 பொது கழிப்பிடங்கள்; சேலத்தில் 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டி மற்றும் பஞ்சந்தாங்கி ஏரியில் 30 இலட்சம் ரூபாய் செலவில் கால்வாய் கட்டும் பணி; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூரில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நோயாளிகளின் உதவியாளர்களுக்கான தங்குமிடம்;

என மொத்தம் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 258 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 125 பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.                      

பேரூராட்சிகளின் இயக்குநரகத்தில் ரூ.56.94 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

இராணிப்பேட்டை மாவட்டம் – நெமிலி, சேலம் மாவட்டம் – காடையாம்பட்டி, ஈரோடு மாவட்டம் – அந்தியூர், ஈரோடு மாவட்டம் – சிவகிரி, நம்பியூர்,  நசியனூர், திருப்பூர் மாவட்டம் – முத்தூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, மூலனூர் ஆகிய பேரூராட்சிகளில் 29 கோடியே 23 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 10 வாரச்சந்தைகள்;

சேலம் மாவட்டம் – கொளத்தூர் மற்றும்  இராமநாதபுரம் மாவட்டம் – கமுதி ஆகிய பேரூராட்சிகளில் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வாரச்சந்தைகள்;

                நீலகிரி மாவட்டம் – தேவர்சோலா மற்றும் நடுவட்டம், மதுரை மாவட்டம் – சோழவந்தான் ஆகிய பேரூராட்சிகளில் 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 3 பேருந்து நிலையங்கள்; கன்னியாகுமரி மாவட்டம் – புத்தளம் பேரூராட்சியில்
50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம்; ஈரோடு மாவட்டம் – கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் 1 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடம்;

                காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பென்னாத்தூர், நாமக்கல் மாவட்டம் – மோகனூர், பட்டணம், ஈரோடு மாவட்டம் – பெருந்துறை, மதுரை மாவட்டம் – அலங்காநல்லூர், சிவகங்கை மாவட்டம் – திருப்பத்தூர், தூத்துக்குடி மாவட்டம் – எட்டையபுரம் ஆகிய பேரூராட்சிகளில்
12 கோடியே 69 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள
8 அறிவுசார் மையங்கள்;

                என மொத்தம் பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 56 கோடியே
94 இலட்சம் ரூபாய் செலவிலான 25 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.78.42 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள்

                பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம் – காமராஜர் நகர், திரு.வி.க. நகர் மண்டலம் – சி.எஸ். நகர், அம்பத்தூர் மண்டலம் – வரதராஜபுரம் ஆகிய இடங்களில் 13 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள
3 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள்;

பூங்காக்கள்

                மாதவரம் மண்டலம் – ரங்கா அவென்யூ, சீனிவாச நகர் 2வது தெரு, ஜெய் மாருதி நகர் (கிழக்கு), ஸ்ரீ பாலாஜி நகர், வி.எஸ். மணி நகர் (தெற்கு), வி.எஸ். மணி நகர் (வடக்கு), இராயபுரம் மண்டலம் – மின்ட் மேம்பாலம் கீழ் பேசின் பாலம் சாலை, அண்ணா நகர் மண்டலம் – அண்ணா நகர் உள்வட்ட சாலை, வளசரவாக்கம் மண்டலம் – நொளம்பூர் 2வது பிரதான சாலை, எம்.எம்.டி.ஏ. காலனி 7வது பிளாக் பிரதான சாலை, கங்கா நகர் 3வது பிரதான சாலை, டி.என்.எச்.பி. OSR, டி.என்.எச்.பி. OSR 2, காமராஜர் நகர் 5வது பிளாக், வி.ஜி.என். நகர், பிருந்தாவன் நகர் 5வது தெரு, அருள்மிகு மீனாட்சி அம்மன் நகர், தமிழ் நகர், சோழிங்கநல்லூர் மண்டலம் – எம்.ஜி.ஆர். சாலை RMZ Phase-1 ஆகிய இடங்களில் 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள
20 பூங்காக்கள்;

விளையாட்டு திடல்கள்

                வளசரவாக்கம் மண்டலம் – ராயலா நகர் 1வது குறுக்கு தெரு, மணலி மண்டலம் – எம்.ஆர்.பி. நகர், மாதவரம் மண்டலம் – சி.எம்.டி.ஏ. கனரக வாகனம் நிறுத்துமிடம், அண்ணா நகர் மண்டலம் – திருநகர்  20-வது தெரு, அடையாறு மண்டலம் – காந்தி நகரிலுள்ள கெனால் பேங்க் சாலையில் நகர்ப்புற அடர்ந்த காடு மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய 4 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 விளையாட்டு திடல்கள்;         

மறுசீரமைக்கப்பட்ட சென்னை பள்ளிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளி வளாகங்கள்

                பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்களின் கீழ், தண்டையார் பேட்டை மண்டலம் – பட்டேல் நகரில் உள்ள சென்னை ஆரம்ப பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப் பள்ளி, புதிய மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி, திரு.வி.க. நகர் மண்டலம் – குக்ஸ் சாலை, ஜமாலியாவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி, அண்ணா நகர் மண்டலம் –செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம் – நுங்கம்பாக்கம் பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை ஆரம்ப பள்ளி, சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி மற்றும் சென்னை ஆரம்ப பள்ளி, கோடம்பாக்கம் மண்டலம் – நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அடையாறு மண்டலம் – கோட்டூர் வளாகத்தில் சென்னை உயர்நிலை பள்ளி, சென்னை ஆரம்ப பள்ளி, மற்றும் புதிய கல்வி வளாகம், என 50 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட சென்னை பள்ளிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளி வளாகங்கள்;

                என மொத்தம் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 78 கோடியே
42 இலட்சம் ரூபாய் செலவிலான 40 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ரூ.278.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள 2 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

                சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் சுமார் 33,760 மக்கள் பயன்பெறும் வகையில்
196 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் மற்றும் உத்தண்டி பகுதியில் சுமார் 9400 மக்கள் பயன்பெறும் வகையில் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள விரிவான பாதாள சாக்கடைத் திட்டம், என மொத்தம் 278 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்குதல்

                சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அலுவலக உதவியாளர், களப்பணியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கும்;

நகராட்சி நிர்வாக இயக்ககத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 68 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் / வருவாய் உதவியாளர், அலுவலக உதவியாளர், பணி ஆய்வர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு ஈவுத்தொகை வழங்குதல்

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின்
2022-2023 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக
18 கோடியே 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைஅமைச்சர்முனைவர்டி.ஆர்.பி. ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர்
மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சப்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ். சிவராசு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக ஈரோட்டிலிருந்து வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப.,

திருப்பூரிலிருந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ்,  மாநகராட்சி மேயர் என். தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர்
பவன் குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப.,

திருச்சிராப்பள்ளியிலிருந்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட ஆட்சித் தலைவர்
எம். பிரதீப் குமார், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் டாக்டர்
ஆர். வைத்தியநாதன்,இ.ஆ.ப.,

சேலத்திலிருந்து மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர்
எஸ். கார்மேகம், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் எஸ். பாலசந்தர், இ.ஆ.ப.,

திருப்பத்தூரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் க. தேவராஜி, அ. நல்லதம்பி, மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.