இன்று மாலை, ரௌத்திரம் வாசகர் வட்டம் சார்பில், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற, ஐயா தமிழருவி மணியன் மற்றும் கவிஞர் வாசுகி சீனிவாசகம் ஆகியோர் எழுதியுள்ள நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு புத்தகமுமே நாம் அனைவரும் படித்துச் சிறப்புற வேண்டியவை. குறிப்பாக, ஐயா தமிழருவி மணியன் அவர்களின் ‘பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள்’ புத்தகம், அரசியலில் இருப்பவர்களுக்கும், அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கும் ஒரு அற்புதமான கையேடு.
அதே போல, கவிஞர் வாசுகி அவர்களின் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ புத்தகம், நமது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய், மனைவி, மகள் என பெண்களின் பங்கையும், அவர்கள் முக்கியத்துவத்தையும் அற்புதமாக விளக்குகிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டு, மதிப்பிற்குரிய கவிஞர் ந.வாசுகி அவர்கள் எழுதியுள்ள ‘என் ஜன்னலுக்கு வெளியே’ என்ற நூலை வெளியிடும் வாய்ப்பினை வழங்கிய ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கும், நூலைப் பெற்றுச் சிறப்பித்த எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு. நாகராஜன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசியலின் முக்கியத் தலைவர்களான, ஜார்க்கண்ட் மாநில மாண்புமிகு ஆளுநர் திரு CP ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞரும், அரசியல் ஆய்வாளருமான திரு KS ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் கல்வி நிறுவனத் தலைவருமான சைதை துரைசாமி, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு GK வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு பாரிவேந்தர், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் திரு கனக சபாபதி, காமராஜர் மக்கள் கட்சி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் இரா. கண்ணன் ஆகியோருடன் இந்த விழாவில் கலந்து கொண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்.