இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் பாலின வள மையத்தை மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன்.,IAS அவர்கள் தனுஷ் M.குமார்.,MP அவர்கள் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டத்தின் மூலம் 6 வது நாள் முகாம் இராஜபாளையம் நகராட்சி 40,41,42 போன்ற வார்டுகளை ஒருங்கிணைத்து PAC.ராமசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன்.,IAS அவர்கள் தனுஷ் M.குமார்.,MP அவர்கள் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம் அவர்களும் 16 துறை அதிகாரிகள் கலந்து கொண்ட *முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார்,ராமமூர்த்தி நகராட்சி ஆணையர் நாகராஜன் அவர்கள் நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா அவர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் 16 துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.