திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, 2023 -2024 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களில், நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் 16.12.2023 முதல் 06.01.2024 வரை 21 நாட்களுக்குள் கூடுதலாக ஒரு சுற்றுக்கு மொத்தம் 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 94068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.