இன்று (11.01.2024) சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் – 2024 விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் எ.எம்.வி.பிரபாகரராஜா, அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி, பொதுத் துறை செயலாளர் க. நந்தகுமார், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.