• Sun. Oct 19th, 2025

கேலோ இந்தியா2024: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Byமு.மு

Feb 1, 2024
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய சாதனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதன் வாயிலாகவும் அண்மையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வாயிலாகவும் தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகர் மற்றும் உலக விளையாட்டு மையம் என்ற தனது நிலையை உறுதிப்படுத்தி வருகிறது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட சாம்பியன்கள் நிகழ்த்திய சிறப்பான சாதனையானது, முதன்முறையாக குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கிறது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை எவ்விதத்திலும் குறைபாடற்ற முறையில் நடத்தியதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். நமது திறமையான விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய இச்சாதனை எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கிட வழிவகுப்பதாய் அமைந்துள்ளது!