இந்தியாவின் தலைசிறந்த சமயத்தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் 161ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அனைவருக்கும் “தேசிய இளைஞர் தின” நல்வாழ்த்துகளை தெரிவிப்பதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தர் அவர்களின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது. அதாவது, “நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” என்றார் சுவாமி விவேகானந்தர். அவருடைய எண்ணங்கள் ஈடேறும் வகையில், நம் சமூகம் முன்னேறுவதற்கும், நம் தேசம் வலிமை பெறுவதற்கும் ஒவ்வொரு இளம் வயதினரும் அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் தங்களுடைய பங்களிப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், “தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.”.
“தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்”.
“எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்”. என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை மனதில் வைத்து பெண்ணினத்தை காத்திடுவோம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, துரோக சிந்தனைகள் இல்லாமல்,சுயநலமின்றி, பொதுநலத்தோடு வாழும் பண்பையும், உயர்ந்த எண்ணங்களையும், தூய்மையான சுற்றுப்புற சூழலையும், நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதே, நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாக எண்ணி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.