“கம்பிவடத் தொலைக்காட்சித் தொழிலாளர்கள் நலவாரியம்” என்பதனை “தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியம்” என பெயர் மாற்றம் செய்து 13.1.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, இதன் மூலம் கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தொழிலாளர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, கேபிள் டிவி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவர்தம் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் நல திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரியத்தின் மூலம் சுமார் 60,000 உறுப்பினர்களும் அவருடைய குடும்பத்தினர்களையும் சேர்த்து சுமார் 2,50,000 நபர்களுக்கு மேல் பயனடைவர். இதன் மூலம் உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாரியத்தின் கீழ்கண்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
1. திருமண உதவித் தொகை
2. மகப்பேறு உதவித் தொகை
3. குடும்ப உறுப்பினர்கள் மகன் மற்றும் மகளுடைய கல்வி உதவித் தொகை
4. தனி நபர் விபத்து உதவி
5. இயற்கை மரண உதவித்தொகை
6. ஈமச்சடங்கு உதவித்தொகை
இந்நலத்திட்டங்களை பெற உறுப்பினர்கள் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரிய இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாரியத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு பதிவு செய்யவும்
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யவும் www.tnctvwb.in என்கிற இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளலாம், நலத்திட்ட உதவி தொகை நேரடியாக உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் இணைய தளத்தை தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியம் தலைவர் ஜோ. ஜீவா, அரசு கூடுதல் தலைமை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தீரஜ்குமார், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., உறுப்பினர் செயலர் மரு.ப.மு.செந்தில்குமார், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..