• Sat. Oct 18th, 2025

மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம்..

Byமு.மு

May 21, 2024
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்; இன்றைய சில நாளிதழ்களில் குவைத்தில் கைதான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 5.12.2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு 9.2.2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.