• Sat. Oct 18th, 2025

தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின நீதிபதி ஸ்ரீபதி.. எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..

Byமு.மு

Feb 14, 2024
தமிழ்நாட்டின் முதல் பெண் பழங்குடியின நீதிபதி ஸ்ரீபதி.. எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதே ஆன ஸ்ரீபதி அவர்கள் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று முதல் பழங்குடியின பெண் நீதிபதியாக தேர்வாகி இருப்பதற்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்,

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகளைச் சான்றோள் எனக்கேட்ட தாய்”
என்று வள்ளுவரே மாற்றி எழுதும் வண்ணம் பின்தங்கிய நிலையில் இருந்து இத்தகைய செயற்கரிய சாதனை புரிந்திருக்கும் மாணவி ஸ்ரீபதி மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கிறேன்.