• Sat. Oct 18th, 2025

விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை அறிவிப்பு!.

Byமு.மு

Mar 25, 2024
விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை அறிவிப்பு

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 10 இடங்களை  காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட உள்ள 9 தொகுதிகளில் முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மயிலாடுதுறை மற்றும் நெல்லை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் குழப்பம் நிலவியது. நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் நிலவும் உட்கட்சி பூசலே வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததற்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கான ரேசில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் இருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.