• Sat. Oct 18th, 2025

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!.

Byமு.மு

Mar 25, 2024
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best!

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.

பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்.