• Sun. Oct 19th, 2025

விவசாயி வீட்டில் பிறந்தவரை வேளாண் அமைச்சர் ஆக்கிய தலைவர்!. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பதிலுரை

Byமு.மு

Feb 22, 2024
விவசாயி வீட்டில் பிறந்தவரை வேளாண் அமைச்சர் ஆக்கிய தலைவர்!. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பதிலுரை

வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் பதிலுரை-22.02.2024

பாழ்பட்டுக் கிடந்த தமிழ் நிலத்தை பண்படுத்தியவர்களை நினைவுகூர்ந்து எனது பதிலுரையைத் தொடங்குகிறேன்!

* சமுதாய மேடுபள்ளங்கள் – வேற்றுமை ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தமிழ்நிலம் இருந்தது. கொடூரமான உயிர்க் கொல்லிகளும் இருந்தன.

இதையெல்லாம் தனது தடியால் அடித்துச் சரிபடுத்தியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்!

* தந்தை பெரியாரால் சமப்படுத்தப்பட நிலத்தில் – தமிழ் மண்ணுக்கே உரிய இயற்கை உரங்களைப் போட்டு மண்ணை வளப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா!

* பேரறிஞர் அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்ட நிலத்தில் மிகச் சரியான விதைகளை விதைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

* களைகளைக் களைந்து – விளைச்சலை அதிகப்படுத்திக் காட்டிக் கொண்டு இருப்பவர் – நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

இந்த நால்வரால் வளர்ந்தது தான் தமிழ்நிலம் ஆகும்.

சமயக் குரவர்கள் நால்வர் என்பார்கள்.

திராவிட இனத்தின் மானம் காக்கும் மன்னர்கள் இந்த நால்வரும் தான். 

இந்த நால்வரையும் வணங்குகிறேன். 


உழவே தலை என்றார் அய்யன் வள்ளுவன்.

அத்தகைய தலை சிறந்த துறைக்கு என்னை அமைச்சர் ஆக்கி –
எங்களுக்காக தனி நிதி நிலை அறிக்கையையும் தந்து –
இதை நான்காவது ஆண்டாக தாக்கல் செய்ய வைத்த
எங்கள் உயிரான தலைவர் –
உணர்வான தலைவர் –
முதலமைச்சர் அவர்களே!
ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்த எனக்கு –
லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நன்மை தரும் வாய்ப்பை வழங்கியமைக்காக கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரப்புயர நீர் உயரும் 
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான் – என்று அன்று பாடினார் அவ்வையார்!
அவரே இன்று இருந்திருந்தால்-
கோன் உயர்ந்தால் –
அதாவது 
உயர்ந்த மன்னன் ஆட்சிக்கு வந்ததால் 
குடி உயர்ந்தது-
நெல் உயர்ந்தது –
வரப்பு உயர்ந்தது என்று பாடி இருப்பார்.
( அதாவது ரிவர்ஸ்ல பாடி இருப்பார்)

நீங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அதிகமாக மழை பெய்தது என்றால் வானமே உங்களை வாழ்த்துகிறது.

நீங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பூமியில் விளைச்சல் அதிகம் ஆகிறது என்றால் பூமியே உங்களை வாழ்த்துகிறது.

வானம் முதல் பூமி வரை வையகமே வாழ்த்தும் வண்ணம் ஆண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் அவர்கள் – வாழ்வாங்கு வாழ வாழ்த்தி எனது உரைக்குள் வருகிறேன்!

சட்டமன்ற உறுப்பினர்கள்

செல்லூர் ராஜு MLA
ஜி. கே. மணி MLA
வானதி சீனிவாசன், MLA

கொப்பரை / பயிர் காப்பீடு / பயிர் இழப்பீடு / தேங்காய் எண்ணெய்

  • அரவை மற்றும் பந்து கொப்பரைகள்
    1.19 இலட்சம் மெ. டன் 83,386 விவசாயிகளிடமிருந்து விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்ச ஆதரவுவிலையை ஒன்றிய அரசு வருடந்தோறும் நிர்ணயம் செய்கிறது.
  • தேங்காய் எண்ணெய் உணவுக்காக பயன்படுத்திட விழிப்புணர்வு மற்றும் உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.4436 கோடி இழப்பீட்டுத் தொகை 25.12 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வறட்சி மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.940 கோடி 12.58 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தங்கமணி, MLA
வானதி சீனிவாசன், MLA

தென்னை வாடல் நோய் – ஆராய்ச்சி மேற்கொண்டு நடவடிக்கை.

பதிலுரை

  • தென்னையில் உள்ள வாடல் நோய் கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கொப்பரை கொள்முதல் விலை ரூ.108.60
  • கொப்பரை தேங்காய் 1.19 இலட்சம் மெ.டன். 83,386 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 
  • தேங்காய் எண்ணெய் உணவுக்காக பயன்படுத்திட விழிப்புணர்வு மற்றும் உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
  • இது ஒரு பைட்டோபிளாஸ்மா நோய்
  • 1-2 வருடம் கழித்தே நோயின் அறிகுறி தென்படும்
  • கேரளா வாடல் நோயை ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தலாம்
  • இதனை கட்டுப்படுத்த தனியாக ரூ.1 கோடியே 15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 250 ஏக்கர் வயல்விளக்க திடல் அமைக்கப்படும்
  • உழவியல்முறை
  • பசுந்தாள் உரமிடல், தேவையான நீர் பாசனம், பாதிக்கப்பட்ட நிலத்தில் வெள்ளப்பாசனம் தவிர்த்தல், போதுமான வடிகால்
  • மரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு
  • உயிரி முறை
  • கோகோகான் என்ற எதிர் உயிரி கலவையை ஏக்கருக்கு 5 லிட்டர் அளவில் மண்ணில் இட வேண்டும்
  • இரசாயன முறை
  • மரத்திற்கு ஜிப்சம் 1 கிலோ, மெக்னீசியம் சல்பேட் அரை கிலோ
  • 50 மில்லி தென்னை டானிக் வருடத்திற்கு 2 முறை வேர் மூலம் அளித்தல்
  • இத்துடன் பரிந்துரைக்கப்பட்ட உர அளவு (1.3 கிலோ யுரியா, 2 கிலோ சூப்பர், 3 1/2 கிலோ பொட்டாஷ்)

ஜி.கே. மணி, MLA

மண்ணுயிர் காப்போம்
களர் உவர் நில மேம்பாடு                    பாராட்டு
மா, பலா, வாழை மேம்பாடு
ஒரு கிராமம் ஒரு பயிர்

2023ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்த போதிலும், சிறுதானிய உற்பத்தி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, மல்பெரி உற்பத்தி குறைந்துள்ளது குறித்து

  • 2023-24ஆம் ஆண்டில் சிறுதானிய இயக்கம் மூலம் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தியதன் மூலம் சாகுபடி பரப்பானது 9.23 லட்சம் எக்டரை விட நடப்பாண்டு 9.38 லட்சம் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
  • உற்பத்தி 36.31 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த்தை நடப்பாண்டில் 37.37 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டை காட்டிலும் 1 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்தள்ளது.
  • நடப்பாண்டில் பயறு வகைகள் சாகுபடி பரப்பு 6.59 லட்சம் எக்டர்
  • எண்ணெய்வித்துக்கள் சாகுபடி பரப்பு 7.9 லட்சம் எக்டர் பரப்பு

சாகுபடி பரப்பு
10 ஆண்டுகளில் 11.7 லட்சம் எக்டர் அதிகப்படுத்துதல்

  • அதிமுக ஆட்சியில் 2020-21 – 61.56 லட்சம் எக்டர்
  • கழக ஆட்சியில் 62.6 லட்சம் எக்டர்
  • கடந்த ஆட்சியை விட கூடுதல் 1.04 லட்சம் எக்டர்

இருபோக சாகுபடி

  • 2020-21ல் 10 லட்சம் எக்டராக இருந்த்தை 10 ஆண்டுகளில் 20 லட்சமாக உயர்த்துதல்
  • 2022-23ல் இருபோக சாகுபடி பரப்பு
    14.23 இலட்சம் எக்டராக உயர்த்தப்பட்டது.

வேளாண்மை நிதிநிலை அறிக்கை
கருத்துக் கேட்புக் கூட்டங்கள்

கடந்த மூன்று ஆண்டுகளில்
(2021-22, 2022-23, 2023-24)

கூட்டங்களின் எண்ணிக்கை                    – 19

கலந்து கொண்ட விவசாயிகள்                                – 1,311

கோரிக்கைகளின் எண்ணிக்கை              – 1267

நிறைவேற்றப்பட்டவை                                            – 548

நிறைவேற்றப்படாதவை                                          – 719

மொத்த அறிவிப்புகள்                                – 371

2024-25 கருத்துக் கேட்புக் கூட்டங்கள் விவரம்

கூட்டங்களின் எண்ணிக்கை            – 4

கலந்து கொண்டு விவசாயிகள்
      கருத்து தெரிவித்த விவசாயிகள்                – 549

வேளாண்மை உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கை நிதி ஒதுக்கீடு விவரம்

2021-22ரூ. 34,220.65 கோடி77 லட்சம் விவசாயிகள்
2022-23ரூ. 33,007.68 கோடி78 லட்சம் விவசாயிகள்
2023-24ரூ. 38,904.46 கோடி104 லட்சம் விவசாயிகள்
2024-25ரூ. 42,281.87 கோடி110 லட்சம் விவசாயிகள்

கடந்த ஆண்டைவிட கூடுதல் ஒதுக்கீடு ரூ. 3,377.41                                                                   கோடி

கடந்த மூன்று ஆண்டுகளில்                       நிதி செலவினம்

:26,998 கோடி
கடந்த மூன்று ஆண்டுகளில்                       பயனாளிகள்

:2 கோடியே 59 இலட்சம் விவசாயிகள்

பயிர் காப்பீட்டுத் திட்டம்

கடந்த மூன்று ஆண்டுகளில்

  • இழப்பீட்டுத் தொகை – ரூ. 4,436 கோடி
  • பயனாளிகள்             – 25.12 இலட்சம் விவசாயிகள்

2023-24 பதிவு செய்த விவசாயிகள் – 14.57 இலட்சம்

பதிவு செய்த பரப்பு- 33.49 இலட்சம் ஏக்கர்

நெல்லுக்கான ஊக்கத் தொகை

பொது ரகம் (குவிண்டால் ஒன்றுக்கு)

2023-24                 (ரூ.2,183+82)       = 2,265

2022-23 (ரூ.2,040+75)     = 2,115

2021-22 (ரூ.1,940+75)     = 2,015

சன்ன ரகம்

2023-24 (ரூ.2,203+107)   = 2,310

2022-23 (ரூ.2,060+100)   = 2,160

2021-22 (ரூ.1,960+100)   = 2,060

கடந்த மூன்று ஆண்டுகளில்

  • நெல் கொள்முதல் – 111.88 இலட்சம் மெட்ரிக் டன்
  • ஊக்கத் தொகை     – ரூ.985.523 கோடி
  • பயனாளிகள்           – 15.44 இலட்சம் விவசாயிகள்
வருடம்ஊக்க தொகை (கோடியில்)நெல் கொள்முதல் (மெ.டன்)பயனாளிகள்
2021-22383.31547,41,1928,27,249
2022-23414.3544,63,1117,34,920
2023-24187.7819,84,6731,01,198
மொத்தம்985.521,11,88,97616,63,367

மின் இணைப்பு

  • கடந்த 2 ஆண்டுகளில் 2 இலட்சம் புதிய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
  • மொத்த விவசாய இலவச மின் இணைப்புகள் – 23.37 இலட்சம்
  • கடந்த 3 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மானியம்-ரூ.18,084 கோடி
  • 3.3 இலட்சம் ஏக்கர் இறவை சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில்

வறட்சி, வடகிழக்கு பருவமழை மற்றும்
பருவம் தவறி பெய்த மழை பாதிப்பு
நிவாரணம் வழங்கிய விவரம்

மாநில அரசு நிதியிலிருந்து

  • பாதிக்கப்பட்ட பரப்பு            – 19.85 இலட்சம் ஏக்கர்
  • நிவாரணத் தொகை – ரூ.940 கோடி
  • பயனாளிகள்                               – 12.58 இலட்சம் விவசாயிகள்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

2022-23 (2021-22 அரவைப் பருவம்)

  • 2022-23 நிதி ஒதுக்கீடு                   : ரூ.214.43கோடி
  • விடுவிக்கப்பட்ட தொகை        : ரூ. 214.43 கோடி
  • சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.195
  • பயனாளிகள் 1,20,767 விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்  கணக்கில்  வழங்கப்பட்டது.
  • கரும்பு விலை டன் ஒன்றுக்கு 2950(ரூ.2755+195)

2023-24 (2022-23) அரவைப் பருவம்

  •  2023-24 நிதி ஒதுக்கீடு              : ரூ.259.75 கோடி
  • விடுவிக்கப்பட்ட தொகை : ரூ. 252.27 கோடி
  • சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.195
  • பயனாளிகள் 1,37,877 விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில்  வழங்கப்பட்டது.
  • கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.3016.25 (ரூ.2821.25+195)
    • 3,875 விவசாயிகளுக்கு ரூ. 6.42 கோடி வழங்க அரசாணை எதிர்நோக்கப்படுகிறது.