• Sun. Oct 19th, 2025

ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தேர்வு செய்தார்.

Byமு.மு

Feb 1, 2024
ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தேர்வு செய்தார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் மூன்று (3) பயணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (01.02.2024) கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழகங்களின்  வலைதளமான https://www.tnstc.in, செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் அது போன்ற நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில்  மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு,  மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜனவரி 2024 மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை நடைமுறை படுத்தும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான மூன்று (3) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (01.02.2024) தேர்வு செய்தார், அதன் விவரங்கள் கீழ்வருமாறு,

ஜனவரி-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- விரைவில் வழங்கப்படும்.

வ.எண்பயணச்சீட்டு (PNR) எண்தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர்ரொக்கப்பரிசு (ரூபாய்)
1)T50959052ESSAKKI MURUGAN.S10,000/-
2)T51210787SEETHA.K10,000/-
3)T51655633IMTEYAZ ARIF10,000/-