• Sun. Oct 19th, 2025

NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் பயிற்சி

Byமு.மு

Jan 8, 2024
NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் பயிற்சி

பட்டய மற்றும் பட்டப்படிப்பு படிப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி,எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் தொழில்துறை சார்ந்த தானியங்கிதிறன் மேம்பாட்டு பயிற்சி (Industrial Automation) மற்றும் எண்முறை உற்பத்திதுறையில் திறன்மேம்பாட்டு பயிற்சி (Digital Manufacturing) வழங்கப்படவுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சிதலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கிவருகிறது.

அதன் அடிப்படையில் பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு வேலைவாயப்புடன் கூடிய தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி (Industrial Automation) மற்றும் எண்முறை உற்பத்திதுறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Digital Manufacturing )NTTFநிறுவனத்தின்மூலம் வழங்கி வேலைவாய்ப்பு பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன்டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிக்கானகால அளவு 6 மாதம் ஆகும். மேலும் தங்கிபடிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசியதிறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு ரூ.16000/- முதல் ரூ.21000/- வரைபெறலாம். மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 21,000 முதல் 25,000 வரை பெறலாம். மேலும் புகழ் பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.