20.12.2023-ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கப் பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களான PMK, TMC, HMS, DMDK, மனித உரிமைகள் கழகம், புதிய நீதிக் கட்சி, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கம், CITU தலைமையிலான 7 சங்கங்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு முதலியவை இணைந்து, தமிழக அரசுக்கும், போக்குவரத்துக் கழகத்திற்கும் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது.
தொழிலாளர் நலத் துறை சார்பில் கடந்த 27.12.2023 அன்று முதல் கட்ட சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இரண்டாவது கட்டமாக 6.1.2024 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி இரண்டு நாட்களில் நல்ல பதில் சொல்வதாகக் கூறிய போக்குவரத்துத் துறை அமைச்சர், இதுவரை தொழிலாளர்களுக்கு நன்மை தரும் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
அதன் பின்பு, 8.1.2024 அன்று தொழிலாளர் நலத் துறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், 9.1.2024 முதல் வேலை நிறுத்தம் துவங்கிய நிலையில், 10.1.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம், பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாட
இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2,000/- வழங்க அரசுக்கு அறிவுரை வழங்கியதோடு, ஜனவரி மாதம் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
ஆனால், இந்த விடியா திமுக அரசு இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்க மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றும், பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அவரவர் குடும்பத்தினருடன் அவர்களது சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதியாக, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரிய எனது அறிவுரையை ஏற்று, அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று, பயணிகள் பொங்கலுக்கு அவரவர் ஊர்களுக்குச் செல்ல, இரவு பகலாக பணியாற்றினார்கள்.
பொங்கலுக்குப் பிறகு, தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் முன்பாக நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த அரசு குழு அமைத்தது. ஆனால், அந்தக் குழு இன்றுவரை கூடவில்லை. இறுதியாக, 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை வழங்கியது.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க 6.2.2024 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உடனே இந்த விடியா தி.மு.க. அரசு போக்குவரத்து வருவாய்த் துறை சார்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புதிதாக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. இதனால், ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 27.2.2024 அன்று பல்லவன் இல்லம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத் துவங்க வேண்டும், இல்லையென்றால் தொழிலாளர்களுக்கு உடனடியாக ரூ. 5,000/- இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிய வருகின்றன.
அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று (6.3.2024) நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலன் என்று வேஷம் போடும் இந்த விடியா திமுக அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று, இடைக்கால நிவாரணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையினை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










