• Sat. Oct 18th, 2025

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம்..உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

Byமு.மு

Jan 31, 2024
Condemnation of Udayanidhi Stalin

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கனவே கிழித்து எறிந்த மக்கள், இம்முறை அதனை அமல்படுத்தத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும் தூக்கி எறிவார்கள்.

அடிமைகளின் உதவியோடு கொண்டு வரப்பட்ட மானுட விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விட மாட்டோம் என்று நம் முதலமைச்சர் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள்.

பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லையோ, அதேபோலக் குடியுரிமைத் திருத்தச்சட்டத்தாலும் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.