தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு
உலக முதலீட்டாளர் மாநாடு – 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதுகுறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது.
2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல்திட்டத்தை உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடத் தமிழ்நாடு மும்முரமாகிறது.
தமிழ்நாட்டின் துடிப்புமிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரம்மாண்டமான மாநாட்டில் வரும் ஜனவரி 7, 8 தேதிகளில் இணைந்திடுங்கள்!